குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. இந்த பொம்மையை பிடிக்காதவர்களே இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்சென் குடும்பம் எப்படி அவர்களுடைய சிறிய உள்ளூர் பொம்மை நிறுவனத்தை லீகோ நிறுவனமாக மாற்றியது எப்படி..? உலகளவில் அடையாளம் காணப்பட்ட பொம்மை பிராண்ட் நிறுவனமாக மாற்றியது எப்படி?

 

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கடந்த 60 வருடங்களாக இந்நிறுவனத்தில் பெரியதாக எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை என்பதே. இப்படிபட்ட லீகோ நிறுவனத்தின் கதையை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

லீகோ பேட் மேன்

லீகோ பேட் மேன்

சமீபத்தில் மாபெரும் அதிரடி வெற்றி பெற்ற லீகோ பேட் மேன் திரைப்படத்தின் வெற்றி மற்றும் அதைத் தொடர்ந்த லீகோ லேண்ட் எனப்படும் சிறுவர் பொழுதுபோக்குப் பூங்காக்களின் வெற்றி ஆகியவற்றின் மூலம் இந்த பொம்மை நிறுவனம் இன்றைய பிரபலமான கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.

டிஜிட்டல் யுகம்

டிஜிட்டல் யுகம்

இன்றைய டிஜிட்டல் உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த அனலாக் பொழுதுபோக்கு நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நிராகரிக்கப்பட்டதைக் கருத்தில் கொள்ளும் போது லீகோ நிறுவனத்தின் வெற்றி சிறிய வெற்றி அல்ல.

இவை அனைத்திற்கும் மேலாக லீகோ நிறுவனத்தை 1932 இல் டென்மார்க்கில் தொடங்கிய அதே குடும்பம் இன்று வரைத் தொடர்ந்து உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.

 

நன்கு விளையாடுங்கள்
 

நன்கு விளையாடுங்கள்

லீகோவின் முதன்முதல் பொம்மைகள் 1930களின் தொடக்கத்தில் டேனிஷ் நாட்டுத் தச்சரான ஓலோ கிர்க் கிறிஸ்டியான் சென்னால் வடிவமைக்கப்பட்டது.

கிறிஸ்டியான் சென் அவரது மகன்களை உற்சாகப்படுத்துவதற்காக மர பொம்மைகளை வடிவமைத்தார். அதை அவருடைய பிள்ளைகள் மிகவும் விரும்பினார்கள். இதைப் பார்த்த அவர் அதை ஒரு வியாபாரமாக மாற்ற முயற்சித்தார். அவர் லீகோ என்ற பெயரை டேனிஷ் வார்த்தையான ‘காட்த்' என்பதிலிருந்து எடுத்தார். இதற்கு "நன்கு விளையாடு" என்று அர்த்தம்.

முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட கர்ம விதிப்படி லீகோ என்பதற்கு லத்தீன் மொழியில் "நான் கட்டுமானிக்கிறேன்" என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது என்பதைப் பற்றி அந்த நேரத்தில் கிறிஸ்டியான்சென்னுக்குத் தெரியாது.

 

 1947இல்..

1947இல்..

ஓலோ கிர்க் கிறிஸ்டியான் சென் ஆரம்பக் காலத்தில் கிறிஸ்துமஸ் பொருட்களை விட தனது மர பொம்மை வர்த்தகத்தை சந்தையில் நிலைநாட்ட தனது வியாபாரத்தை தக்க வைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தார்.

பின்னர் 1947 இல் கிறிஸ்டியான் சென் ஒரு பிளாஸ்டிக் வார்ப்பு அச்சு ஒன்றை வாங்கி பிளாஸ்டிக் கரடிகள் மற்றும் கிலுகிலுப்பைகள் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் பிளாஸ்டிக் வார்ப்பு அச்சை வாங்கிய முடிவானது அவரது நிறுவனத்தின் முகப்பையே என்றென்றைக்குமாக மாற்றப் போகிறது என்று அந்த நேரத்தில் அவர் அறிந்திருக்கவில்லை.

 

புதிய உயரம்

புதிய உயரம்

ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென் 1958 ஆம் ஆண்டு அவரது 66 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். பிறகு அவருடைய மூன்றாவது மகன் காட் ஃப்ரெட் கிர்க் கிறிஸ்டியான்சென் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காட் ஃப்ரெட்டின் வழிகாட்டுதலின் கீழ் லீகோ நிறுவனம் குழந்தைகள் அவர்களின் கற்பனையில் எதையும் கட்டுமானிக்கவும் உருவாக்கவும் கூடிய "சிஸ்டம்ஸ்" என்ற அமைப்பை உருவாக்கத் தொடங்கியது.

 

பிளாஸ்டிக் கட்டுமான துண்டுகள்

பிளாஸ்டிக் கட்டுமான துண்டுகள்

லீகோ சமூகம் முதன்முதலில் உள்ளே பிணைக்கும் பிளாஸ்டிக் கட்டுமான கட்டத்துண்டுகளை விற்பனை செய்தபோது, கூரையைப் பிய்த்துக் கொண்டு அமோக விற்பனையடைந்தது.

மேலும் ஒரு புதிய பொம்மை பிராண்ட் சின்னம் பிறந்தது. லீகோவில் நகரங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் கற்பனைக்குட்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் கட்டுமானிக்க முடியும்.

 

தி லீகோ பிறந்தது

தி லீகோ பிறந்தது

மூன்றாம் தலைமுறையின் உரிமையாளரான ஓலேவின் பேரன் மற்றும் "தி லீகோ" குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2004 வரை இருந்த கெஜெல்ட் கிர்க் கிறிஸ்டியான்சென் இன்று வரை தொடர்ந்து இளைஞர்களைக் கவர்வதை இலக்காகக் கொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென்

ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென்

நாளைய கட்டுமானர்களை ஊக்குவிப்பதும் முன்னேறச் செய்வதுமே எங்களது நோக்கம். எங்களது முக்கிய பங்களிப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் நிறைந்த விளையாட்டு அனுபவத்தை வழங்குவதே என்று நாங்கள் நம்புகிறோம்.

அறிவிக்கப்பட்ட முதலீடானது வருங்கால சந்ததியினர் மரபுரிமையாக பெறக்கூடிய ஒரு நேர்மறையான தாக்கத்தை இந்த உலகத்தில் விட்டுச் செல்லும் என்று தொடரும் எங்கள் லட்சியத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. இது நிச்சயமாக லீகோ குழுமத்தின் நோக்கம் மற்றும் எனது தாத்தாவும் லீகோ குழுமத்தின் நிறுவுனருமான ஓலே கிர்க் கிறிஸ்டியான்சென் அவர்களின் குறிக்கோளான "சிறந்தது மட்டுமே போதுமானது" என்ற கொள்கைக்கு பொருத்தமாக உள்ளது.

 

பிரபல கலாச்சாரமாக விரிவாக்கம்

பிரபல கலாச்சாரமாக விரிவாக்கம்

காட் ஃப்ரெட் 1968 ல் லீகோ நிறுவனத்தின் சொந்த ஊரான டென்மார்க்கின் பில்லூண்டில் ஒரு லீகோ லேண்ட் எனப்படும் பொழுதுபோக்குப் பூங்காவை திறப்பதன் மூலம் லீகோ நிறுவனத்தின் புகழை அதிகரிக்க ஒரு வாய்ப்பைக் கண்டார். அப்போது முதல் ஆறு இதர லீகோ லேண்டுகள் உலகம் முழுதும் திறக்கப்பட்டன. மேலும் லீகோ நிறுவனம் ஸ்டார் வார்ஸ், ஜூராசிக் பார்க் மற்றும் பல பிரபலமான திரைப்படங்கள் தொடர்புடைய லீகோ செட்டுகளை உருவாக்கியதன் மூலம் அதன் முக்கியத்துவத்தையும் புகழையும் அதிகப்படுத்திக் கொண்டது. இந்த செட்டுகள் லீகோ திரைப்படங்கள் என்ற நிறுவனத்தை உருவாக்கும் யோசனை உதிக்க பின்னணியாக இருந்து வழிவகுத்தது. லீகோ திரைப்படங்களின் ஒவ்வொரு வெளியீடும் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை தன்பக்கம் இழுக்கிறது.

லீகோ குழுமத்தின் வருங்காலம்

லீகோ குழுமத்தின் வருங்காலம்

லீகோ குழுமம் இன்று 21.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வேகம் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

நிறுவனம் நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறது. என்பதை உறுதி செய்ய 2016 ல் இந்நிறுவனமானது ஒரு தலைமுறை மாற்றத்தை அறிவித்தது.

 

மிகப்பெரிய மாற்றம்

மிகப்பெரிய மாற்றம்

கிஜெல்ட் கிர்க் கிறிஸ்டியான்சென் போர்டின் துணை தலைவர் பதவியிலிருந்து விலகினார். எனவே அவரது மகன் தாமஸ் கிர்க் கிறிஸ்டியான்சென் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிந்தது. கிஜெல்ட் குழுமத்தின் ஒரு சாதாரண உறுப்பினராக எப்போதும் இருப்பார்.

தொர்ந்து ஆதிக்கம்

தொர்ந்து ஆதிக்கம்

"சில வருடங்களாகவே இந்த குடும்பம் வருங்காலத்திற்கான சில கவனமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நாங்கள் மென்மையான தலைமுறை அதிகார ஒப்படைப்பை மேற்கொள்ள சில முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயராக உள்ளோம்.

இந்த நடவடிக்கையால் லீகோ குழுமத்தில் குடும்ப உரிமை தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதை பராமரிக்க முடியும். இந்த மாற்றம் அடுத்த தலைமுறைக்கு மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்டது அல்ல வரவிருக்கும் அனைத்து தலைமுறைகளுக்கும் சேர்த்தது தான் " என்கிறார் கிஜெல்ட்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Story of Lego

The Story of Lego
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X