பேஸ்புக்-ஐ வாங்க திட்டம்தீட்டிய மைக்ரோசாப்ட்.. சிம்பிளாக மறுத்த மார்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

2004ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம், துவங்கி சில மாதங்களிலேயே மைக்ரோசாப்ட், கூகிள், யாஹூ போன்ற பல முன்னணி நிறுவனங்களைப் பேஸ்புக்கை கைப்பற்றத் துடித்தன. ஆனால் எந்த வலையிலும் சிக்காத பேஸ்புக் தற்போது மிகப்பெரிய வலைத்தளமாக உருவெடுத்துள்ளது.

சரி வாங்க அப்படி யார் யார் பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற துடித்தார்கள் என்று பார்ப்போம்.

<strong>(பேஸ்புக் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்.. " title="(பேஸ்புக் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்.. "மாஸ்டர் பிளான்" மிஸ்டர்.மார்க்..!)" />(பேஸ்புக் கைபற்றிய டாப் 10 நிறுவனங்கள்.. "மாஸ்டர் பிளான்" மிஸ்டர்.மார்க்..!)

2004ஆம் ஆண்டில்

2004ஆம் ஆண்டில்

பேஸ்புக் நிறுவனம் துவங்கி சில மாதங்களிலேயே 2004ஆம் ஆண்டுக் கடைசியில் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற பெயர் அறியப்படாத நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளர் 10 மில்லியன் டாலர் ஆஃபரை வழங்கினார்.

பிரன்ட்ஸ்டர்

பிரன்ட்ஸ்டர்

பேஸ்புக் நிறுவன துவக்க காலத்தில் சமுக வலைத்தளத்தில் ஜாம்பவானாக இருந்த பிரன்ட்ஸ்டர்.காம் நிறுவனமும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற திட்டமிட்டது.

ஆனால் தனது நிறுவன வரிவாக்கத்திற்காக நிதி திரட்டமும் முடிவை எடுத்ததால் பேஸ்புக்கை வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டது.

 

கூகுள்

கூகுள்

2004ஆம் ஆண்டுக் கோடை காலத்தில் கூகுள் நிறுவன பணியாளர்கள் பேஸ்புக் நிறுவனத்தில் பணி செய்யவோ அல்லது நிறுவனத்தை முழுமையாக வாங்கத் திட்டமிட்டு பாலோ ஆல்டோ நிறுவனத்திற்கு வந்தனர்.

     

    வயாகாம்
     

    வயாகாம்

    2005ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் வருடத்திற்கு 35 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு இருக்கும் போது அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான வயாகாம் 75 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய ஆஃபரை அளித்தது.

    ஆனால் இதையும் பேஸ்புக் மறுத்தது.

     

    மைஸ்பேஸ்

    மைஸ்பேஸ்

    அதே 2005ஆம் வருடத்தில் மைஸ்பேஸ் என்னும் மற்றொரு சமுக வலைத்தள நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற அதன் சீஇஓ கிரிஸ் டீஉல்வி தலைமையிலான குழு மார்க் ஜூக்கர்பெர்க்கை சந்தித்தது.

    நியூஸ் கார்ப்

    நியூஸ் கார்ப்

    அமெரிக்க டிஜிட்டல் வர்த்தகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள நியூஸ் கார்ப் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனத்தை விட்டு வைக்கவில்லை.

    இவ்வளவு ஆஃபர்கள் வந்தாலும் கண்டு கொள்ளாலமல் தொடர்ந்து தனது பணியைச் செவ்வெனச் செய்து வந்தார் மார்க்.

     

    மீண்டும் வயாகாம்

    மீண்டும் வயாகாம்

    வயாகாம் நிறுவனத்தின் எம்டிவி வாடிக்கையாளர் அதிகளவில் பேஸ்புக் பயன்படுத்துவதாக வயாகாம் கண்டுகொண்ட நிலையில் மீண்டும் பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற வயாகாம் நிறுவனத்தின் சீஇஓ டாம் பெரெஸ்டன் தலைமையிலான குழு பேஸ்புக் சென்றது.

    என்பிசி

    என்பிசி

    வயாகாம், நியூஸ் கார்ப் நிறுவனங்களைப் போலவே முன்னணி ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான என்பிசி பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற துடித்தது.

    ஆனால் பேஸ்புக் நிறுவனத்தின் அசுர வளர்ச்சியால் நிறுவனத்திற்கான தொகையைக் கொடுக்க முடியாமல் திட்டத்தைக் கைவிட்டது.

     

    3வது முறையாக வயாகாம்

    3வது முறையாக வயாகாம்

    கடைசி வாய்ப்பாகப் பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்ற நினைத்த வயாகாம். 1.5 பில்லியன் டாலர் தொகையை முன்வைத்தது.

    அதையும் வழக்கம் போல் அசால்டாகத் துக்கி எரிந்தார் மார்க்.

     

    யாஹூ

    யாஹூ

    2006ஆம் ஆண்டில் பேஸ்புக் முதலீட்டாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் பலர் இந்நிறுவனப் பங்குகள் விற்க முடிவு செய்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யாஹூ நிறுவனம் 1 பில்லியன் டாலர் ஆஃபரை அளித்தது.

    இந்நிலையில் தான் பேஸ்புக் தனது NEWS FEED திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கியது. எனவே NEWS FEED வெற்றி அடைந்தால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மார்க் நினைத்தார்.

    அதன் படியே யாஹூ ஆஃப்ர் அளித்த 10 நிமிடத்தில் மார்க் அதனை நிராகரித்தார்.

     

    ஏஓஎல்

    ஏஓஎல்

    2006ஆம் ஆண்டுக் கடைசியில் AOL, டைம் இன்க் மற்றும் டைம் வார்னர் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் சில நிறுவனங்களை விற்று பேஸ்புக் நிறுவனத்தை 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு வாங்கத் திட்டமிட்டனர்.

    கடைசிக் கட்டத்தில் இந்த முடிவுகளை மாறியது. இதனால் ஆஃபரை நிராகரிக்கும் வாய்ப்பை பேஸ்புக் இழந்தது.

     

    மீண்டும் யாஹு

    மீண்டும் யாஹு

    2006ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைத் தாண்டி விரிவாக்கம் அடைந்து வந்த நிலையில், யாஹூ நிறுவனம் மீண்டும் வந்தது.

    கடந்த முறை மந்தமான வர்த்தக வளர்ச்சியால் வெறும் 850மில்லியன் டாலர் மட்டும் அளித்த யாஹூ இம்முறை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அளித்த தயாராக இருந்தது.

    மார்க் வழக்கம் போல் நோ சொல்லிவிட்டார்.

     

    கூகுள்

    கூகுள்

    பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது அதிக நம்பிக்கை கொண்ட கூகிள் நிறுவன தலைமை விளம்பர அலுவலர் டிம் ஆர்ம்ஸ்டிராங் நிர்வாகக் குழுவை கஷ்டப்பட்டுச் சம்மதம் வாங்கிப் பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்றும் படலத்தில் கூகிள் 2007ஆம் ஆண்டு இறங்கியது.

    ஆனால் கூகிள் கொஞ்சம் வித்தியாசம் சுமார் 15 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்து பேஸ்புக் நிறுவனத்தை மாற்றி அமைப்பதாகத் தெரிவித்தது.

    உண்மையைச் சுதாரித்த மார்க் இதற்கும் நோ தெரிவித்தார்.

     

    அட மைக்ரோசாப்ட்-ம் இருக்கு..

    அட மைக்ரோசாப்ட்-ம் இருக்கு..

    கூகிள் நிறுவனத்தைப் போல் மைக்ரோசாப்ட் வித்தியாசமாகச் சிந்தித்தது. பேஸ்புக் நிறுவனத்தைக் கைப்பற்றும் பணியை Hoffman-LaRoche மூலம் துவங்கினார்.

    இதில் மைக்ரோசாப்ட் முதலில் சிறிய அளவிலான பங்குகளில் முதலீடு செய்யதும் அதன் பின் வருடத்திற்கு 5 சதவீதம் என்ற வகையில் 7 வருடத்தில் மொத்த பேஸ்புக் நிறுவனப் பங்குகளைக் கைப்பற்ற Hoffman-LaRoche மற்றும் மைக்ரோசாப்ட் கூட்டணி திட்டமிட்டது.

    கடைசியில் மிகப்பெரிய போராட்டத்தின் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஸ்டீவ் பால்மர் பேஸ்புக் நிறுவனத்தின் 1.6 சதவீத பங்குகளை மட்டும் கைப்பற்றினார்.

     

    தி பேஸ்புக் எபெக்ட்

    தி பேஸ்புக் எபெக்ட்

    இந்தத் தகவல்கள் அனைத்தும் டேவிட் கிரிக்பேட்ரிக் எழுதிய தி பேஸ்புக் எபெக்ட் என்ற புத்தகத்தில் இருந்து பெற்றப்பட்டது.

    நன்கொடை

    நன்கொடை

    மகளுக்காக 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..!மகளுக்காக 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..!

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    These 10 companies tried to buy Facebook

    Facebook, the biggest social network in the world, now has over 1.5 billion monthly active users. According to David Kirkpatrick's book The Facebook Effect, the company was a very popular M&A target in its startup years.
    Company Search
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X