உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சொத்து இந்த 8 பேர்களிடம் உள்ளது...! யார் இவர்கள்..?

எட்டுப் பேர்களில் பெரும்பாலும் டெக்னாலஜி துறையைச் சேர்ந்தவர்கள், ஆறு அமெரிக்கர்கள், ஒரு ஐரோப்பியர், ஒரு மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள்.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 7.5 பில்லியன் என்று இருக்கும் நிலையில் இந்த மக்கள் தொகையின் பாதி அளவுக்கு உள்ள மக்களிடம் உள்ள பணத்திற்குச் சரிசமமாக எட்டே எட்டுப் பேர்களிடம் உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

 

இந்த எட்டுப் பேர்களில் பெரும்பாலும் டெக்னாலஜி துறையைச் சேர்ந்தவர்கள், ஆறு அமெரிக்கர்கள், ஒரு ஐரோப்பியர், ஒரு மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த எட்டு பேர்களின் அறக்கட்டளைகள் உலகின் பல மனிதர்களைக் காப்பாற்றுகிறது என்பது மட்டும் ஒரு ஆறுதல்.

அநீதிக்குப் போராடும் தனியார் அமைப்பான ஆக்ஸ்ஃபாம் என்ற அமைப்புச் சமீபத்தில் நடத்தியுள்ள ஆய்வில் இந்த எட்டு பேர் தான் உலகின் மிகப் பெரிய கோடீசுவரர்கள் என்பதை உறுதி செய்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.

சுமார் 3.6 பில்லியன் மக்களிடம் உள்ள தொகை $409 பில்லியன் என்றும் இந்த எட்டுப் பேர்களிடம் உள்ள தொகை $426 பில்லியன் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எட்டு பேர் யார் யார் என்பதைத் தற்போது பார்ப்போம்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர். சொத்து மதிப்பு $75 பில்லியன்

பில்கேட்ஸ் என்ற பெயரை உச்சரிக்காதவர்கள் உலகில் மிகவும் குறைவு. ஒவ்வொரு வீட்டிலும் தற்போது கம்ப்யூட்டர் இயங்கி வருகிறது என்றால் அதற்கு இந்த ஒரு மனிதரே காரணம்.

இவருடைய மைக்ரோசாப்ட் தான் உலகில் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1970களில் மிகச்சிறிய அளவில் ஆரம்பித்த மைக்ரோசாப்ட் இன்று உலகின்
நம்பர் ஒன் நிறுவனமாக ஆலமரம் போல் வளர்ந்து உள்ளது. கடந்த பல வருடங்களாக உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பட்டியலில் உள்ளார். பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் தொடங்கியுள்ள அறக்கட்டளை மில்லியன் கணக்கான டாலர் உலகில் வறுமையில் வாடும் மக்களைச் சென்றடைந்துள்ளது.

 

அனாப்சுடீ ஒர்டேகா

அனாப்சுடீ ஒர்டேகா

ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த இண்டிடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். சொத்து மதிப்பு $67 பில்லியன்

கடந்த 1975ஆம் ஆண்டுத் தனது முதல் ஃபேஷன் ஸ்டோர் ஆன ஜாரா ஃபேஷன் ஷாப் என்பதைத் தொடங்கினார் இந்த ஓர்டேகா. இன்று ஐரோப்பிய கண்டத்தின் முதல் கோடீஸ்வரர் இவர்தான்.

இவருடைய ஓர்டேகா இண்டிடெக்ஸ் குரூப் உலகம் முழுவதும் சுமார் 7000 ஃபேஷன் ஷாப்களாக விரிவு அடைந்துள்ளது. இவர் இந்த அளவுக்குப் புகழ் அடையக் காரணம் இவருடைய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் தரமானதாக இருக்கும் என்பதே. ஜாரா மற்றும் இண்டிடெக்ஸ் நிறுவனங்களில் இவருடைய பங்குத்தொகை மட்டும் 59 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பங்கின் மொத்த மதிப்பு சுமார் 97 பில்லியன் யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாரன் பஃபெட்
 

வாரன் பஃபெட்

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிபதிபர் மற்றும் பங்கு வர்த்தக மன்னன். சொத்து மதிப்பு $60.8 பில்லியன்.

உலக அளவில் வெற்றிகரமான பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுபவர் என்று கூறினால் அது வாரன் பஃபெட் ஒருவரே. 'தி ஓரக்கள் ஆஃப் ஒமாஹா' என்ற இவருடைய நிறுவனம் கொடுக்கும் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவினர் மட்டுமின்றி உலகில் உள்ள பலர் முதலீடு செய்துள்ளனர். டீன் ஏஜ் வயது இந்தத் தொழிலை தொடங்கிய வாரன், தனது நாற்பதாவது வயதிலேயே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார்.

தற்போது 86 வயதை அடைந்துள்ள பஃபெட், இன்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். குறிப்பாக டெக்னாலஜி நிறுவனங்கள் இவருடைய ஆலோசனையின் பேரில்தான் வெற்றிகரமாக இயங்குகிறது. மிகுந்த மனித நேயம் கொண்ட இவர் தனது சொத்துக்களில் பெரும்பகுதியை வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்காகச் செலவு செய்பவர்.

கடந்த 2006ஆம் ஆண்டில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அவர்களின் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய தொகையை வழங்கியவர்.

 

கார்லஸ் ஸ்லிம் ஹேலு

கார்லஸ் ஸ்லிம் ஹேலு

மெக்சிகோவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர். சொத்து மதிப்பு $50 பில்லியன் டெலிமெக்ஸ், அமெரிக்கா மோவில், சாம்சங் மெக்சிகோ மற்றும் குரூபோ கார்சோ ஆகிய நிறுவனங்களின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ, ஆக இருந்து வரும் கார்லஸ், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகத் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் சற்று கீழிறங்கிய நேரத்தில் இவர் நம்பர் ஒன் இடத்தில் இருந்து இறங்கினார்.

மேலும் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்களின் மெக்சிகோவுக்கு எதிரான கொள்கை இவரது பங்கு மதிப்பைப் பெரிதும் கீழிறக்கச் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற செய்தி வெளியானவுடன் இவருடைய சொத்து மதிப்பு $5 அளவுக்குக் குறைந்தது என்றால் யூகித்துக் கொள்ளுங்கள். இவரும் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய தொகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜெஃப் பெஜாஸ்

ஜெஃப் பெஜாஸ்

அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் சேர்மன். சொத்து மதிப்பு $45.2 பில்லியன்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. பொதுமக்கள் வாங்க விரும்பும் பொருளை வீட்டில் இருந்தே வாங்கலாம் என்ற ஐடியாவை உலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் இந்தப் பெஜாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் ஷாப்பிங்கில் இவரது ஐடியா ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையில்லை.

முதன்முதலில் புத்தகங்களை மட்டுமே ஆன்லைன் மூலம் ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சப்ளை செய்தவர் பின்னர்க் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருட்களை அதிகரித்து இன்று அமேசானில் கிடைக்காத பொருளே இல்லை என்ற நிலையைக் கொண்டு வந்துவிட்டது. அமேசான் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் பெஜாஸ் கையில் 17% பங்குகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனத்தில் கிடைத்த லாபத்தை வைத்துப் பல நிறுவனங்களை இவர் விலைக்கு வாங்கினார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் புளு ஒரிஜின் என்ற விமான நிறுவனத்தை வாங்கிய பெஜாஸ், அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்குச் சலுகை விலையில் உலகைச் சுற்றி காட்டினார்.

அதுமட்டுமின்றி ஸ்பேஸ் ஹோட்டல், தீம் பார்க்குகள் என இவருடைய சொத்துக்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன.

 

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

சேர்மன் மற்றும் இணை நிறுவனர் ஃபேஸ்புக். சொத்து மதிப்பு $44.6 பில்லியன்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று உலகின் மூன்றாவது மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. சீனா, இந்தியாவின் மக்கள் தொகையை அடுத்து அதிக நபர்கள் இருப்பது ஃபேஸ்புக்கில்தான் என்பதைக் குறிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மார்க், தன்னுடைய கல்லூரி நண்பர்களை இணைப்பதற்காகத் தொடங்கிய ஃபேஸ்புக், இன்று உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக விளங்குகிறது. கடந்த 2012ஆம் ஆண்டுப் பேஸ்புக் பங்குகள் வெளியானது. 32 வயதான மார்க் மற்றும் அவரது மனைவியிடம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 99% பங்குகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

 

லேரி எல்லிசன்

லேரி எல்லிசன்

ஓரக்கிள் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இணை நிறுவனர். சொத்து மதிப்பு $43.6 பில்லியன்

அமெரிக்காவின் மிக இளவயது புரோக்கிராமராகக் கடந்த 1970களில் இருந்த லேரி அவர்களுக்குக் கிடைத்த முதல் மிகப்பெரிய வாடிக்கையாளர் CIA. இதற்காக இவர் செய்து கொடுத்த புரொஜ்க்ட் பெயர்தான் ஓரக்கிள். இந்தப் புரொஜக்ட்டின் மிகப்பெரிய வெற்றிக் காரணமாக 1977ஆம் ஆண்டில் இதே பெயரை தனது நிறுவனத்திற்காக மாற்றினார். இதற்கு முன்னர் இவருடைய நிறுவனம் எல்லிசன் அசோசியேட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சாப்ட்வேர் மற்றும் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறது. இவருடைய நிறுவனம் தற்போது நிறுவனங்களின் டேட்டாக்களைக் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளிலேயே பகிர்ந்து கொள்ளும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற முறையில் கவனம் செலுத்தி வருகிறது. இவருடைய ஓரக்கிள் நிறுவனத்தில் இவருடைய பங்கு மதிப்பு மட்டுமே 27% என்பது குறிப்பிடத்தக்கது.

 

மைக்கேல் புளூம்பெர்க்

மைக்கேல் புளூம்பெர்க்

முன்னாள் நியூயார்க் மேயர். சொத்து மதிப்பு $40 பில்லியன். கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பொருளாதார ஆலோசனை நிறுவனமான புளூபெர்க் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். உலக அளவில் பொருளாதார ஆலோசனை, மாஸ் மீடியா, சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆகியவை இவருடைய வாடிக்கையாளர்கள்.

இவர் தனது புளும்பெர்க் நிறுவனத்தின் 88 சதவீத பங்குதாரராக உள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த இவர் நியூயார்க் நகரின் மேயராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2008 மற்றும் 2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளராகவும் பரிசீலிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 8 men are as rich as half of the world

These 8 men are as rich as half of the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X