ஆயுத உற்பத்தியில் பட்டையைக் கிளப்பும் 10 நிறுவனங்கள்..!

By Janakiraman
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1879 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் வில்லியம் சேர்மன் 'போர் என்பது ஒரு நரகம் ' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த வார்த்தைகள் ஒரு சாதாரண மனிதனுக்கும் பொருந்தும். மனித குலத்தைக் கொத்துக் கொத்தாக அழிக்கும் இந்த ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடும் பல பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் கொழித்துச் செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

எவன் செத்தால் என்ன? நம்ம பை ரொம்பினா சரி என்கிற பெரியண்ணன் மனோபாவம் உள்ள சில நாடுகள் ஆங்காங்கே தீவிரவாதத்தைத் தூண்டி வளர்த்துப் பாதிப்பை உருவாக்குவோர்க்கும், பாதிக்கப்படுவோர்க்கும் இருவருக்குமே ஆயுதங்கள் வழங்கி அவர்கள் வியாபாரத்தைச் செழிப்பாக நடத்தி வளமாகவே இருந்து வருகின்றன.

அந்த வகையில் செயல்பட்டுவரும் உலகின் 10 மிகப்பெரிய ஆயுதம் தயாரிப்பாளர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் கடமை அது பற்றித் தெரிந்து கொண்ட எங்களுக்கு இருக்கிறது என்று நாங்கள் நினைப்பதால் இதோ சில விவரங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

10. Thales (தாலஸ்)

10. Thales (தாலஸ்)

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 10.37 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : பிரான்ஸ்

பாரிஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாலஸ் பிரான்ஸ் நாட்டின் கப்பல்களை மேம்படுத்துவதோடு, பிரிட்டிஷ் அரசின் கப்பல் படைக்குத் தீ பாதுகாப்புடன் கூடிய அதிநவீன ராடார் வசதிகளுடன் கூடிய விமானம் தாங்கி கப்பல்களை வழங்கி வருகிறது. குறைந்த தூர ஏவுகணைகளை எதிர்க்கும் Starstreak ஏவுகணைகளை உருவாக்கி மேம்படுத்திப் பல நாடுகளின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது.

 

9. Finmeccanica (பின்மேக்கநிக்கா)

9. Finmeccanica (பின்மேக்கநிக்கா)

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 10.56 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : இத்தாலி

இந்த நிறுவனம் இத்தாலியின் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பாளராக விளங்கி வரும் அதே நேரத்தில், Agustaa Westland ஹெலிகாப்ட்டர் களை பல நாடுகளுக்கு வழங்கி வருகிறது. நவீனமான Ariete போர் டாங்கிகளை இத்தாலிய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இத்தாலியின் பொருளாதாரம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக 32.45% பங்குகளைக் கொண்டுள்ளது.

 

8. United Technologies Corporation
 

8. United Technologies Corporation

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 11.9 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

இந்நிறுவனம் பொது மக்களுக்கான சந்தைகள் மற்றும் ராணுவத்துக்கான சந்தைகள் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிப்பதோடு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் முதல் மிகப்பெரிய மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

2001 ஆம் ஆண்டு வெளிவந்த Black Hawk Down என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட UH-60 Black Hawk ஹெலிகாப்ட்டர் களின் மிகப்பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 27 நாடுகளின் ராணுவங்களில் இந்நிறுவனத்தின் சாதனங்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.

 

7. EADS / Airbusன் குழுமம்

7. EADS / Airbusன் குழுமம்

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 15.7 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : சரியான தகவல் இல்லை.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் விமானப் படைகளில் பயன்பாட்டில் உள்ள Eurofighter Typhoon ரகப் போர் விமானங்களின் தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக இந்நிறுவனம் வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சாதனம் ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் மாலி நாடுகளின் விமானம் தாங்கி கப்பல்களில்
பயன்படும் தாக்குதலுக்கான ஹெலிகாப்ட்டர் Eurocopter Tiger என்பதாகும்.

 

6.General Dynamics

6.General Dynamics

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 18.66 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

கணினிகள் முதல் ஸ்டிங்கர் ஏவுகணைகள், Tomahawk Cruise ஏவுகணைகள்,வரை உலகின் ஆயுத தொழிற்சாலையின் பெறும் பங்கு வகிக்கிறது இந்நிறுவனம். M1 Abrams டாங்குகள், மூன்றாம் தலைமுறை போர் டாங்குகள் ஆகியவற்றைத் தயாரித்து அமெரிக்க ராணுவத்திற்கும், கடற்படைக்கும் வழங்கியுள்ளவை அனைவருக்கும் தெரிந்த பிரபலமான ஆயுதங்களாகும்.

 

5.Northrop Grumman

5.Northrop Grumman

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 20.22 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

Northrop மற்றும் Grumman இரு கம்பெனிகளின் ஒருங்கினைப்புக்குப் பிறகு உருவான Northrop Grumman நிறுவனம் பாரம்பரிய மற்றும் நவீன அனல் மற்றும் அணு ஆயுதங்களைத் தாங்கி சென்று ரகசியமாய்த் தாக்கக்கூடிய B-2 Spirit Stealth bomber தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. Northrop சமீபத்தில் போயிங் மற்றும் ராய்தான் நிறுவனங்களில் பணியாற்றிய ஜெயமே போஹ்ங்கே வை பணியமர்த்தி அமெரிக்காவின் ஆயுத தொழில்களில் நல்ல போட்டியை உருவாகியுள்ளது.

 

4.Raytheon

4.Raytheon

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 21.95 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

மசாசூசெட்ஸ் நகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் உலகமெங்கிலும் பரவலான பயன்பாட்டில் உள்ள வழிகாட்டி ஏவுகணை தயாரிப்பில் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. அதன் ஒரு தொகுதி 2 முதல் 3 மில்லியன் டாலர் விலை மதிப்புள்ளது.

 

3.BAE Systems

3.BAE Systems

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 26.82 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : பிரிட்டன்

7.7 பில்லியன் டாலர் பொருட்செலவில் இரண்டு பிரிட்டிஷ் கம்பெனிகள் இணைக்கப்பட்டன. BAE Systems அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்குப் பெருமளவில் தளவாடங்கள் வழங்கும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. மேலும், ஆஸ்திரேலியா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உள்ளூர் சந்தைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. Eurofighter Typhoon மற்றும் F-35 Lightning II ஆகியவற்றின் பிரதான உற்பத்தியாளராகவும் இருக்கிறது.

 

2.Boeing

2.Boeing

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 3௦.7 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

747, 777 மற்றும் 787 ஆகிய வர்த்தகப் போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய விமானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அதே நேரத்தில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் நீர்முழுகிக் கப்பல் எதிர்ப்பு விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் மின்னணு போர் விமானங்கள் ஆகியவற்றை வழங்குபவர்களாகவும் உள்ளனர். AH-64 அபாச்சே எனப்படும் தாக்குதலுக்கான ஹெலிகாப்ட்டர் மற்றும் F-18 சூப்பர் ஹோர்நெட் எனப்படும் இருவகை விமானங்களும் இவர்களாலேயே தயாரிக்கப்படுகின்றன.

 

1.Lockheed Martin

1.Lockheed Martin

வருவாய் (2014 ம் ஆண்டில்) : 45.6 பில்லியன் டாலர்கள்
உருவான நாடு : ஐக்கிய அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய ஆயுதத் தயாரிப்பாளரான Lockheed Martin உலகெங்கிலும் உள்ள நிறுவனத்தின் அலுவலகங்களில் 116,௦௦௦ பணியாலர்களைப் பணியமர்த்தியுள்ளதுடன், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனிலிருந்து அதன் 10% நிதியினைப் பெறுவதுடன், அமெரிக்க அரசின் மிகப்பெரிய ஒப்பந்ததாரராகவும் உள்ளது. C-13௦ ஹெர்குலஸ், C-5 கேலக்ஸி, F-16 Fighting Falcon, F-22 Raptor மற்றும் ஐந்தாம் தலைமுறை F-35 Lightening II Stealth Fighter ஆகியவற்றின் பிரத்யேக தயாரிப்பாளராகவும் உள்ளது இந்நிறுவனம்.

மேலும், கணினி மற்றும் ராடாரின் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து எதிரிகளின் இலக்கு மற்றும் ஆயுதங்களைக் கண்காணித்து அழித்திட வழிகாட்டும் Aegis Combat System கருவியையும் உற்பத்தி செய்கிறது. PAC-3 மற்றும் THAAD உள்ளிட்ட ஏவுகணைகளையும் உற்பத்தி செய்கிறது.

 

எது சரி எது தவறு

எது சரி எது தவறு

ஆயிரக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஆயுதங்களுக்குச் செலவழிக்கும் நாடுகளில் இன்னமும் அன்றாடம் காய்ச்சிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக வளர்ச்சியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செலவழித்துக்கொண்டுதான் இருக்கின்றன பல நாடுகள்.

எது சரி எது தவறு என்பது நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டே இருக்கிறது. யாரும் எந்தப் பதிலுக்காகவும் காத்திருக்கவும் இல்லை. காத்திருக்கப் போவதும் இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 companies that rules Weapons Manufacturing industry

Top 10 companies that rules Weapons Manufacturing industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X