ஏற்றுமதி வர்த்தகத்தில் கலக்கும் டாப் 10 நாடுகள்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து இணைப்பால் உலகமே சுருங்கிவிட்டது. இப்போது இந்தியா போன்ற பெரிய நாடுகள் முதல் மங்கோலியாக போன்ற சிறிய நாட்களை அனைத்தும் பன்னாட்டு வர்த்தகத்தில் போட்டி போட்டு வருகிறது, காரணம் பன்னாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிகளவிலான லாபம் இருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களது ஏற்றுமதி அளவுகளைத் தினமும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்திய உட்பட உலகில் பல நாடுகள் தங்களது ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல்வேறு நடவடிக்கைகளைச் செய்துவருகின்றன.

இவ்வாறு 2015ஆம் ஆண்டு நிலவரப்படி அதிக ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் பெற்ற நாடுகளையே இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அதன் வலுவான சுற்றுலாத்துறைக்குப் பெயர்போனது. அதே வேளையில் இந்த நாடு ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கிய நாடாகவும் விளங்குகிறது.

இதன் ஏற்றுமதிப் பொருட்களின் தரமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உள்ளது. தென் அமெரிக்கா இயற்கை வளங்கள் நிறைந்தது. பெரும்பாலான உற்பத்திப் பொருட்கள் உட்பட இதன் வருடாந்திர ஏற்றுமதி வருமானம் 56 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

 

 

இத்தாலி

இத்தாலி

இத்தாலி அதன் உணவுப் பொருட்களுக்கும், வாகனங்கள், வசிப்பிடங்கள் மற்றும் சொகுசான வாழ்க்கை முறைக்கும் அனைவராலும் விரும்பப்படுகிறது.

இந்நாட்டின் ஏற்றுமதி இந்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் போதுமானதாக இருக்கிறது. இத்தாலியின் ஆண்டு ஏற்றுமதி வருவாய் சுமார் 60 மில்லியன் டாலர்கள் ஆகும்.

 

இந்தியா

இந்தியா

இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடு அல்ல என்றாலும் ஏற்றுமதியைப் பொருத்தவரை ஒரு செல்வாக்கு மிக்க நாடு.

இந்திய அரசு நிதி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு கடந்த சில வருடங்களாக ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளது, இந்தியாவின் வருடாந்திர ஏற்றுமதி வருவாய் சுமார் 70 மில்லியன் டாலர்களாக உள்ளது.

 

அமெரிக்கா (யு எஸ் ஏ)

அமெரிக்கா (யு எஸ் ஏ)

அமெரிக்கா ஒரு சூப்பர் பவர் எனப்படும் வலிமை மிகுந்த நாடு. இந்த நாடு அதன் தரமான தேயிலை, போர்க் கருவிகள் மற்றும் டிஜிட்டல் ஆயுதங்கள் ஆகியவற்றிற்குப் பெயர்பெற்றது.

உலகின் மிகப்பிரபலமான வாகனங்களையும், விமானங்களையும் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் தற்போதைய ஏற்றுமதி வருவாய் 80 மில்லியன் டாலராக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

சீனா

சீனா

சீனா மற்ற துறைகளைப் போலப் பன்னாட்டு வர்த்தகத் துறையிலும் தன்னுடைய உயர்தரத் தயாரிப்புக்கள் மூலம் பிற நாடுகளுக்குக் கடும் போட்டியாக இருந்து வருகிறது. குண்டூசி முதல் குண்டுவீசும் விமானம் வரை எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் தருவதுடன் இந்தப் பொருட்களின் செயல்திறனிலும் சற்றும் குறைவில்லாமல் அளிக்கிறது. சீனாவின் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ஆண்டுக்கு சுமார் 90 மில்லியன் டாலர்கள்.

துருக்கி

துருக்கி

துருக்கி ஒரு அழகான நிலப்பகுதி. பல்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட இது ஒரு வலிமையான பொருளாதாரமும் நிதி ஆதாரங்களையும் கொண்டது.

துருக்கி கிழக்கும் மேற்கும் சந்தித்துக்கொள்ளுமிடம். நீங்கள் துருக்கியராக இருந்தால் அரசிடமிருந்து உடனடியாக ஏற்றுமதிக்கான உரிமத்தையும் அனுமதியையும் பெற்றுவிடமுடியும். இந்த நாட்டின் ஆண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

நெதர்லாந்து

நெதர்லாந்து

நெதர்லாந்து வலிமைமிக்க நம்பகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட முக்கிய நாடு. நன்கு திட்டமிடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ள ஏற்றுமதித் தொழில் துறை அரசிற்கு நல்ல வருவாயை ஈட்டித் தருகிறது.

நெதர்லாந்து வேளாண் பொருட்களையும், வேளாண் கருவிகளையும் இன்னும் பிற பொருட்களையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் சுமார் 120 மில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.

 

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி உயர்தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்கிறது. முன்னணி பிராண்டு மொபைல் போன்களுக்கும் லேப்டா போன்ற நவீன உபகரணங்களுக்கும் ஜெர்மனி பெயர்பெற்றது.

ஜெர்மனி இன்று ஒரு வளர்ந்த பிரபலமான நாடாக விளங்க அதன் ஏற்றுமதி தொழில் துறை ஈட்டித் தரும் 150 மில்லியன் டாலர்கள் வருவாய் முக்கியக் காரணம் என்றால் மிகையல்ல.

 

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸ் நாடு அதன் உயர்தரத் துணிகளுக்கும் ஆடை ரகங்களுக்கும் ஏற்றுமதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிநவீன ஆடை அணிகலன்கள் மட்டுமல்ல மிக உயர்ந்த தாரம் உடையத் துணிகளையும் ஜவுளிகளையும் உற்பத்தி செய்வதிலும் முன்னிலை வகிக்கிறது. இவற்றின் ஏற்றுமதி மூலம் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை பிரான்ஸ் ஈட்டுகிறது.

 யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து)

யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து)

இங்கிலாந்து நம் பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறது. இந்த நாடு ஒரு வளர்ந்த நாடாக இருப்பதன் ரகசியம் இதன் ஏற்றுமதி வர்த்தகத் துறை. இதன் சக்திவாய்ந்த பொருளாதாரம் ஏற்றுமதித் துறையை அதிக அளவில் நம்பியுள்ளது ஏற்றுமதி மூலம் இந்த நாடு சுமார் 50 மில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.

நம்ம நாடு எப்போ முதலிடத்தில் வருமோ?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Countries with Highest Exports Income 2015

These days, there is tough competition among the countries to export more and more items.
Story first published: Wednesday, June 8, 2016, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X