கிளவுட் சேவையில் 'அமேசான்' நிறுவனத்தை அடிச்சிக்க முடியாது..!

205 பில்லியன் டாலர் சந்தையாக இருக்கும் உலகிலாவிய கிளவுட் சேவை சந்தையில் கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் அமேசான் உடன் போட்டிபோட்டு வருகிறது.

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: கிளவுட் கம்பியூட்டிங் தொழில்நுட்பம் இன்றைய தகவல் தொழிநுட்ப பொருளாதாரத்தில் வர்த்தகத்தின் செயல்பாடுகளில் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

 

உலகக் கிளவுட் தொழிநுட்ப சந்தை மாபெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தத் தொழில் போட்டித் தளத்தில் சில முக்கியப் பிராண்டுகள் மொத்த சந்தையில் 50 சதவிகிதத்தைக் கைப்பற்றித் தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்தி சந்தையைச் சூடுபிடிக்கச் செய்துள்ளன எனச் சினெர்ஜி ரிசர்ச் குரூப் எனும் அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

205 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகக் கிளவுட் தொழில்நுட்ப சந்தை 2017 ஆம் ஆண்டு 240 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு வளர்ச்சியடையக் கூடிய திறன் உள்ளது

ஆகவே நாங்கள் இத்துறையில் சிறந்த விளங்கும் 5 பெரிய நிறுவனங்களை அதன் சந்தை பங்கின் அடிப்படையில் (2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி) இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

சேல்ஸ்போர்ஸ்

சேல்ஸ்போர்ஸ்

அமைந்துள்ள நாடு: அமெரிக்கா
சந்தையில் பங்கு : 4 சதவிகிதம்

இந்நிறுவனத்தின் சிஆர்எம் எனப்படும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மையில் கிளவுட் தொழில் நுட்பத்தில் இவர்கள் 1999 ஆம் ஆண்டுக் கொண்டுவந்த புதிய வழிமுறைகள் சேல்ஸ் கிளவுட் என அழைக்கப்பட்டது. அது முதல் இந்நிறுவனம் வளர்ச்சியடைந்து கிளவுட் தொழில்நுட்ப சந்தையில் ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதற்குப் பின் வந்த வருடங்களில் இவர்களின் புதிய வாடிக்கையாளர்கள் மீதான கவனத்துடன் கூடிய சர்வீஸ் கிளவுட், மார்க்கெட்டிங் கிளவுட் ஐ ஓ டி கிளவுட் போன்ற பிற சேவைகள் கிளவுட் சேவைகளில் சேர்க்கப்பட்டன.

 

கூகிள்
 

கூகிள்

அமைந்துள்ள நாடு: அமெரிக்கா
சந்தையில் பங்கு : 4 சதவிகிதம்

கூகிள் மிக ஆர்வமூட்டக்கூடிய வளர்ச்சியைத் தனது வருமானம் மற்றும் இலாபத்தில் அண்மைய காலங்களில் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இந்த வருமானமானது பெரும்பாலும் விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. இதன் கிளவுட் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ச்சியைச் சற்றே காட்டினாலும் இன்னும் பின்தங்கியே உள்ளது.

கூகிள் கிளவுட் 896 மில்லியன் டாலர் வருமானத்தை 2015 ஆம் ஆண்டின் நாலாவது காலாண்டு முடிவில் பதிவுசெய்துள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டை விட 65% வளர்ச்சியைக் குறிக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தக் கிளவுட் வர்த்தகத்தில் 2016 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் 162 சதவீத வளர்ச்சியுடன் மிக வேகமாக வளரும் ஒரு நிறுவனமாக அதாவது இத்துறையில் 53 சதவிகித வளர்ச்சியோடு முன்னணியில் இருக்கும் அமேசானைப் போன்று இருமடங்கு வளர்ச்சியுடன் முன்னேறியுள்ளது.

 

ஐபிஎம்

ஐபிஎம்

அமைந்துள்ள நாடு : அமெரிக்கா
சந்தையில் பங்கு : 8 சதவிகிதம்

ஐ பி எம் நிறுவனம் ஹைபிரிட் மற்றும் பிரைவேட் கிளவுட் வர்த்தகத்தில் உலகின் முன்னணி நிறுவனம். இதன் புதிய சேவை யுக்திகள் பொது மற்றும் தனியார் கிளவுட் தளங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் இந்தப் புதிய ஹைபிரிட் மற்றும் பிரைவேட் கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 40 தரவு மையங்கள் (டேட்டா சென்டர்ஸ்) மூலமாகக் கிடைக்கிறது.

 

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

அமைந்துள்ள நாடு: அமெரிக்கா
சந்தையில் பங்கு : 11 சதவிகிதம்

1974 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் கார்ப் தன் வாடிக்கையாளர்களுக்காகப் பல புதிய கிளவுட் தொழில் நுட்ப சேவைகளைத் தன்னுடைய பிரத்தியேகமான செயற்தளங்களாகிய அஜூர், ஆபிஸ் ௩௬௫, மற்றும் டைனமிக்ஸ் 365 ஆகியவற்றைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள சுமார் 30 தரவு மையங்கள் மூலம் வழங்குகிறது.

இவர்களின் வாடிக்கையாளர்கள் அரசாங்க இலாக்காக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இந்தத் தொழில் நுட்பத்தைத் தங்கள் வர்த்தகத்தில் பயன்படுத்தித் தானியங்கி மையமாகச் செய்ய முனையும் தனி நபர்கள் எனப் பல்வேறு வகைப்பட்டவர்களாக உள்ளனர்.

 

அமேசான் வெப் சர்விசஸ்

அமேசான் வெப் சர்விசஸ்

அமைந்துள்ள நாடு: அமெரிக்கா
சந்தையில் பங்கு : 31 சதவிகிதம்.

2006 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட அமேசான்.காம் நிறுவனத்தின் துணை நிறுவனமான அமேசான் வெப் சர்விசஸ் உலகக் கிளவுட் தொழில் நுட்ப சந்தையில் ஒரு முன்னோடியான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தன் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு விதமான கிளவுட் சேவைகளை வழங்குகிறது.

இத்துறையில் அனுபவமுள்ள ஒரு நிறுவனமான அமேசான் விரைவில் ஸ்டார்ட்டப் எனப்படும் புதிய தொழில் தொடங்குவோரை மையமாகக் கொண்டு இயங்காத தொடங்கியது. இது தற்போது தன் மொத்த 10 இலட்சம் வாடிக்கையாளர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டுபங்கை கொண்டுள்ளது. இதன் விற்பனை 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தன்னுடைய அண்மை போட்டியாளரான மைக்ரோசாப்டை போல் மூன்று மடங்காக உள்ளது. எனவே இந்தத் துறையில் அமேசானின் பங்கு தற்போது அசைக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 Largest Cloud Companies in the World

Top 5 Largest Cloud Companies in the World - Tamil Goodreturns
Story first published: Saturday, December 3, 2016, 14:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X