இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?

டிரம் பதவி ஏற்க இருக்கும் நிலையில் இரண்டு அமெர்க்க சட்ட வல்லுநர்களை எச்1பி மற்றும் எல்-1பி விசா குறித்த மசோதாக்களின் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கக் குடியரசு தலைவர் டொனால்டு டிரம்ப் தனது முதல் நாள் பணியின் பட்டியில் குடியேற்ற சீர்திருத்தம் இடம்பெற்று இருக்கிறது.

டிரம் பதவி ஏற்க இருக்கும் நிலையில் இரண்டு அமெர்க்க சட்ட வல்லுநர்களை எச்1பி மற்றும் எல்-1பி விசா குறித்த மசோதாக்களின் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்தப் புதிய சட்டத் திருத்தம் எப்படி இந்திய அமெரிக்கப் பணியாளர்களைப் பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

விசா விலை உயர்வு

விசா விலை உயர்வு

அமெரிக்க ஏற்கனவே எச்1பி மற்றும் எல்-1பி விசாவின் விலையை 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2000 அமெரிக்க டாலரில் இருந்து 6,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்தி உள்ளது.

தகுதியில் மாற்றம்

தகுதியில் மாற்றம்

எச்-1பி விசா மூலம் அமெரிக்கச் செல்லும் முதுகலைப் பட்டம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு விலக்கு உண்டு. இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் பணியாற்றுவதில் பலர் முதுகலைப் பட்டம் உடையவர்கள் ஆவர். இப்போது டிரம்ப் முதுகலைப் பட்டம் உடைய வெளிநாட்டவர்களுக்கு உள்ள விலக்கை நீக்க இருக்கின்றது.

எச்1பி விசா ரத்தாகக்கூடிய நிறுவனங்கள்
 

எச்1பி விசா ரத்தாகக்கூடிய நிறுவனங்கள்

ஒரு நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எச்1பி விசா மூலமாகப் பணியாற்றுகிறார்கள் என்றால் அந்த நிறுவனத்திற்கு இனி எச்1பி விசா பெற உரிமை கிடையாது என்று அறிவிக்க உள்ளனர்.

குறைந்தபட்ச சம்பளம்

குறைந்தபட்ச சம்பளம்

எச்1பி விசா மூலமாக அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுடைய சம்பளம் இப்போது குறைந்தபட்சம் 60,000 டாலர்களாக உள்ளது. அதனை 100,000 டாலர்க்காக மாற்றம் செய்யத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

எனவே இந்திய நிறுவனங்கள் செலவை குறைக்க இனி ஊழியர்களை அமெரிக்கா அனுப்புவதைக் குறைக்கும்.

 

சென்ற ஆண்டு அதிக எச்1பி விசா பெற்ற நிறுவனங்கள்

சென்ற ஆண்டு அதிக எச்1பி விசா பெற்ற நிறுவனங்கள்

2016-ம் ஆண்டுப் பின் வரும் நிறுவனங்கள் அதிக எச்1பி விசா பெற்றுள்ளன: இன்ஃபோசிஸ் (33,289), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (16,553), ஐபிஎம் (13,600).

இந்திய வேலை தேடுபவர்கள் மீதான பாதிப்பு

இந்திய வேலை தேடுபவர்கள் மீதான பாதிப்பு

வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணியாளர்களை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், ஆனால் அவர்களுக்கும் கண்ணியமான சம்பளம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தப் புதிய திட்டங்களினால் வரம்பு ஏதும் இல்லாத எல்1 விசா மூலம் அதிக ஊழியர்களை அங்குக் கொண்டு செல்ல இயலும். ஆனால் இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why H1B visa could spoil India's big American dreams

Why H1B visa could spoil India's big American dreams
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X