உலக ரியல் எஸ்டேட் சந்தையில் முடி சூடா மன்னன் 'வாங் ஜியாலின்'..!

By Siva lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் எல்லாத் துறைகளை விடவும் பணம் கொழிக்கும் துறையாக ரியல் எஸ்டேட் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. அதுவும் இந்தத் துறையில் ஆசிய நாட்டுக்கார்கள் தான் ஜாம்பவான்களாக உள்ளனர் என்று பல முன்னணி மற்றும் சர்வதேச பத்திரிக்கை மற்றும் அமைப்புகள் கூறுகிறது.

 

உலகில் உள்ள 10 மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் 7 பேர் ஆசியாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தையில் மூடிச் சூடா மன்னாக இருக்கும் 5 பேர் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

வாங் ஜியாலின் (Wang Jianlin)

வாங் ஜியாலின் (Wang Jianlin)

1954ஆம் ஆண்டுப் பிறந்த சீனாவைச் சேர்ந்த வாங் ஜியாலின், சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மட்டுமின்றி அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளல் ஆகவும் இருந்து வருகிறார்.

டாலியன் வாண்டா குருப்பின் சேர்மனான இவர், சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய மூவி தியேட்டர் ஆபரேட்டராகவும் இருந்து வருகிறார்.

 

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன்

மேலும் ஸ்பானிஷ் கால்ந்து கிளப் Atletico Madrid அணியின் 20% பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மியின் 16 வருடங்கள் பணிபுரிந்த இவர், டாலியன் சிட்டியில் உள்ள அட்மினிஸ்டராகவும் பணிபுரிந்தார். இவரைப் பொருளாதார வல்லுனர்கள் 'நெப்போலியனின் லட்சியத்தை உடையவர்' என்று கூறுவதுண்டு.

லீ ஷா கீ (Lee Shau-kee)
 

லீ ஷா கீ (Lee Shau-kee)

சீனாவை சேர்ந்த ஷண்டே பகுதியில் கடந்த 1928ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி பிறந்த தொழிலதிபர் லீ ஷா கீ , ஹாங்காங்கின் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். ஹெண்டர்சன் லேண்ட் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள லீ ஷா கீ, ரியல் எஸ்டேட் துறையின் ஜாம்பவான்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறிப்பாக ஓட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள் மற்றும் இண்டர்நெட் சர்வீஸ் ஆகியவற்றின் புலி இவர்தான்

 24.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

24.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

கடந்த 2012ஆம் ஆண்டு உலகின் 19வது மிகப்பெரிய பணக்காரராகப் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியலில் இடம் பெற்றிருந்த பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் மில்லியனர்களைக் கணக்கெடுத்து வரும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் இவருக்கு $24.8 பில்லியன் சொத்து மதிப்பு இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது.

பிரென் (bren)

பிரென் (bren)

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான பிரென் கடந்த 1932ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி பிறந்தவர். இர்வின் நிறுவனத்தின் சேர்மன் ஆன இவர் US real estate investment companyயின் முழு உரிமையாளராக உள்ளார். முதன்முதலாக இவர் கடந்த 1958ஆம் ஆண்டு $10,000 மதிப்பில் நியூபோர்ட் பீச்-ஐ கட்டி அனைவரையும் அசற வைத்தார்.

பிரென் கம்பெனி

பிரென் கம்பெனி

கடந்த 1958ஆம் ஆண்டு இவருடைய பெயரிலேயே பிரென் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்துக் கலிபோர்னியாவில் 'ஆரஞ்ச் கண்ட்ரி' என்ற பெயரில் வீடுகளைக் கட்டினார்.

ஃபோர்ப்ஸ் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் 400 மில்லியனர்களில் பட்டியலில் இவருக்கு 30வது இடத்தைக் கொடுத்துப் பெருமை படுத்தியது. இவருடைய அப்போதைய சொத்து மதிப்பு $15.2 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொடை வள்ளல்

கொடை வள்ளல்

அதுமட்டுமின்றிக் கடந்த 2008ஆம் ஆண்டுப் பிசினஸ் வீக் என்ற பத்திரிகை இவர் நாட்டின் மிகப்பெரிய கொடை வள்ளல்களில் ஒருவர் என்று அறிவித்தது. இவர் அமெரிக்க மக்களின் கல்வி, ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் சாதனைப் புரிந்தவர்களுக்கு $1 பில்லியன் டாலர் வரை அன்பளிப்புச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹியூ கா யான் (Hui Ka Yan)

ஹியூ கா யான் (Hui Ka Yan)

எவர் கிராண்டே குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் ஆன சீனாவை சேர்ந்த ஹியூ கா யான் அவர்களுக்கு $6.2 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது. சைனிஸ் ரியல் எஸ்டேட் டெவலப்மெண்ட் கம்பெனி என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் அந்நிறுவனத்தின் மூலம் விண்ணை முட்டும் பல கட்டிடங்களைக் கட்டியுள்ளார்.

சிறிய கிராமம்

சிறிய கிராமம்

சீனாவில் உள்ள ஜூட்டய்காங் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர் உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஜோசப் லா (Joseph Lau

ஜோசப் லா (Joseph Lau

ஹாங்காங்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஜோசப் லா அவர்களுக்கு $10.9 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது. சைனிஸ் எஸ்டேட் ஹோல்டிங் நிறுவனத்தின் 61% பங்குகளை வைத்துள்ள இவர் ஹாங்காங்கின் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களில் ஒருவர்.

ஒயின் சேகரிப்பு

ஒயின் சேகரிப்பு

இவர் ஒரு ஒயின் விரும்பி. இவர் 10,000 பாட்டில் ஒயின்களுக்கும் மேல் சேகரித்து வைத்துள்ளாராம். அதுமட்டுமின்றிப் போயிங் 787 என்ற பிரைவைட் ஜெட் வைத்துள்ளார்.

ஆர்ட் கலெக்சன்

ஆர்ட் கலெக்சன்

சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை இவருக்கு உலகின் அழகிய 10,000 பாட்டில் சேகரித்தவர் என்ற பட்டத்தைக் கொடுத்தது. மேலும் இவர் மல்ட்டி மில்லியன் ஆர்ட் கலெக்சனையும் வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கியில் அப்படி என்னதான் இருக்கு?

இங்க இருந்து தான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறாங்க!!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's biggest Real estate tycoons: Top 5 list

World's biggest Real estate tycoons: Top 5 list - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X