வீட்டுக் கடனுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி முழு விபரம்..!

வங்கிகளில் வராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெரிய தொகை கடன் மற்றும் பாதுகாப்பு குறைவான கடன்களை அளிப்பதை அதிகளவில் குறைந்துள்ளது.

இதனால் மக்களுக்குத் தற்போது அதிகளவில் தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் வீட்டுக் கடன்கள் கிடைக்கிறது. இந்நிலையில் நீங்கள் சரியான தகுதிகளுடன் கடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் நிச்சயம் உங்களுக்குக் கடன் உதவிக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் சொந்த வீட்டைப் பெற தற்போது வங்கிகளில் நிலவும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், தவணை, செயல்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றைக் குறித்து முழுமையான தகவல்களைத் தொகுத்துள்ளோம்.

சென்டரல் வங்கி

வட்டி விகிதம்: 8.30 சதவீதம்
மாத தவணை: 25,656 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.25%, அதிகப்படியாக 20,000 ரூபாய்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

வட்டி விகிதம்: 8.3 - 8.6 சதவீதம்
மாத தவணை: 25,656 - 26,225 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.35%

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.45 சதவீதம்
மாத தவணை: 25,751 - 25,940 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.50%

பாங்க் ஆஃப் இந்தியா

வட்டி விகிதம்: 8.35 - 8.45 சதவீதம்
மாத தவணை: 27,751 - 26,035 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.25%

கனரா வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.55 சதவீதம்
மாத தவணை: 25,751 - 26,130 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.5%

ஆக்சிஸ் வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.75 சதவீதம்
மாத தவணை: 25,751 - 26,511 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 1%

அலகாபாத் வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.85 சதவீதம்
மாத தவணை: 25,751 - 26,703 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.40%

ஐசிஐசிஐ வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.85 சதவீதம்
மாத தவணை: 25,751 - 26,703 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.5%

எச்டிஎப்சி வங்கி

வட்டி விகிதம்: 8.35 - 8.95 சதவீதம்
மாத தவணை: 25,751 - 26,895 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.50%

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா

வட்டி விகிதம்: 8.45 சதவீதம்
மாத தவணை: 25,940 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.59%

யுகோ வங்கி

வட்டி விகிதம்: 8.45 - 8.70 சதவீதம்
மாத தவணை: 25,940 - 26,416 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.5%

கர்நாடகா வங்கி

வட்டி விகிதம்: 8.50 - 8.90 சதவீதம்
மாத தவணை: 26,035 - 26,799 ரூபாய்

பாங்க் ஆப் மகாராஷ்டிரா

வட்டி விகிதம்: 8.65 - 8.75 சதவீதம்
மாத தவணை: 26,320 - 26,511 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.25%

கார்பரேஷன் பாங்க்

வட்டி விகிதம்: 8.75 - 9.00 சதவீதம்
மாத தவணை: 26511 - 26,992 ரூபாய்
செயல்பாட்டுக் கட்டணம்: கடன் தொகையில் 0.50%

Read more about: emi home loan loan bank
Have a great day!
Read more...

English Summary

Complete details of home loan interest rate and EMI- Tamil Goodreturns | வீட்டு கடனுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி முழு விபரம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்