பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதா?

முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களின் முதல் தேர்வாக மட்டுமன்றி அனைவருக்குமான தேர்வாகப் பரஸ்பர நிதி திட்டம் (Mutual Fund) மாறி விட்டது. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு செய்யப்படும் முதலீடு என்பது முதல் முறையாகப் பங்குச் சந்தையில் நுழையும் நிறுவனங்களின் பங்காக இருக்கும் பட்சத்தில் அதை NFO அல்லது புதிய நிதி வாய்ப்பு என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்தில், பாரத் 22 ETF NFO அனைத்து முதலீட்டாளர் பிரிவுகளிலிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொய்க்கும் முதலீட்டாளர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த பங்கின் விலையை ஏற்ற வேண்டிய நிலை உருவானது.

ஆனால் NFO இல் முதலீடு என்பது அளவு பாதுகாப்பானது?

பாரத் 22 ETF NFO-ல் அவர்கள் அறிவித்த அறிமுகச் சலுகை கவர்ச்சிகரமாக இருந்தது. முதலீட்டாளர்களை ஈர்த்தது.

NFO-ல் பங்குகள் 10 ரூபாய் முதலே கிடைக்கின்றது. ஆனால் விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக இவற்றில் முதலீடு செய்வது சரியான செயலாக இருக்க முடியுமா?

அதிகரிக்கும் பங்குகள் மற்றும் சிறந்த தேர்வுகளின் மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட காலப் பலனை அனுபவிக்க முடியும் என்றாலும் அவை சாதகமாக மட்டுமே அமையும் என்று கூற இயலாது.

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக அணுகுமுறை எடுக்கப்பட வேண்டும்.சலுகை காலத்தில் எதிர்பார்த்த அளவு சேர்க்கை இல்லாத நிலையில் உங்களின் முதலீட்டுக்கான லாபம் குறையும் வாய்ப்புள்ளது.

எனவே புதிய கொள்கைகளின் அடிப்படையில் உங்களின் தெரிவு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாகப் பாரத் 22 NFO-ல் 22 பொதுத் துறை நிறுவங்களின் பங்குகளின் சந்தையை மையப்படுத்தி அமைத்திருந்ததால் அமோக வரவேற்பைப் பெற்றது. எனவே உங்கள் முதலீட்டை நன்கு ஆய்ந்து பாதுகாப்பாகச் செய்து பலன்பெறுங்கள்.

Read more about: mutual funds nfo investment invest

Have a great day!
Read more...

English Summary

Should You Be Investing In Mutual Funds Via NFOs?