மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

மியூட்சுவல் ஃபண்டுகள் முதலீட்டு வழிகளில் முக்கியமான ஒன்றாகும். இவற்றில் முதலீட்டாளர்கள் அவர்களுடைய பணத்தைப் பங்குகள் அல்லது கடன் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக டெபாசிட் செய்கிறார்கள். மியூட்சுவல் ஃபண்டுகள் உயர்ந்த வருமானத்தை உருவாக்குவதற்காகத் தொழில்முறை நிபுணர்களால் நடத்தப்படுகிறது.

முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் மீது சிறந்த வருவாயைத் தர நிதி மேலாளர்களின் திறன்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறார்கள். மியூட்சுவல் ஃபண்டுகளானது பங்குகள், கடன், கலப்பினம் மற்றும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. இந்த நிதித் திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிக்கப்படும் சொத்தின் அளவு, கால வரையறை, நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செபி இதை மேற்கொண்டு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்துகின்றது.

மியூட்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு அதன் வகையை அடையாளம் காணுங்கள். அதன்பிறகு கிடைக்கப்பெறும் தேர்வுகளை அவற்றின் தகுதி நிலைகளை வைத்து ஒப்பீடு செய்யுங்கள். அதிக முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறைகளில் சில பின்வருமாறு :

1. மதிப்பீடுகள் (Rating)

மதிப்பீடுகள் கிடைக்கக்கூடிய தேர்வுகளை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்க உதவும். மியூட்சுவல் ஃபண்டுகளின் மதிப்பீடுகள் கிரிசில் மற்றும் இணையதள மதிப்பீட்டு ஆய்வுகளால் வழங்கப்படுகிறது. மதிப்பீடுகளானது பல்வேறு இதர ஆதாரங்களிலிருந்தும் சரிபார்க்கப்பட வேண்டும். பின்னர்க் காலப்போக்கில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைப்புத்தன்மையானது நிதித் திட்டத்தின் எதிர்காலச் செயல்திறனைக் கணிக்கும் முக்கியக் காரணியாகும்.

கிரிசல் மற்றும் இணையதள மதிப்பீட்டு ஆய்வுகள் இரண்டுமே அவர்களுடைய மதிப்பீடுகளுக்கு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுப் பதிவைக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

 

2. செயல்திறன்

இது சதவீத அடிப்படையில் வருவாயின் மூலம் குறிப்பிடப்படுகிறது. கடந்த காலச் செயல்திறன் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், இது முன்கூட்டி உணர்த்தும் ஒரு குறிப்பாக இருக்கிறது. நிலைப்புத்தன்மை விரும்பப்படுகிறது. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் தேர்ந்தெடுக்கத் தக்கதல்ல. தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலாண்டுகளில் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது பலவீனத்தைக் குறிக்கிறது.

ஒரு முடிவு எடுப்பதற்கு முன் திட்டத்தின் செயல்திறன் ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குச் சோதனை செய்யப்பட வேண்டும்.

 

3. நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள்

ஒரு திட்டத்தின் புகழ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களாலும் மதிப்பிடப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ருடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி போன்ற பல்வேறு திட்டங்கள் நிர்வாகத்தின் கீழ் ரூ. 20,000 கோடிகளுக்கும் அதிகப்படியான சொத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

எனவே, முதலீட்டாளா்கள் மிகப்பெரிய அளவில் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் அவா்கள் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். நிர்வாகத்தின் கீ்ழ் இருக்கும் சொத்துக்கள் ஒரு நிதித்திட்டத்தின் புகழுக்கு அளவுகோலாகும்.

நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களின் வீழ்ச்சி நிதி மேலாளர்களின் நெகிழ்வுத் தன்மையைக் கட்டுப்படுத்தும். எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க அபாயமாக இருக்கிறது. ஆனால், வகைப்பாட்டிற்குள் ஒப்பீடு செய்யப்பட வேண்டும்.

 

4. பரந்த திறன் மதிப்பீடு

சி.என்.எக்ஸ். 500 போன்ற பரந்த தளத்திற்கு எதிராகத் திறன் மதிப்பீடு செய்யப்படும். பரஸ்பர நிதிகள் குறுகிய திறன் மதிப்பீடுகளான சென்செக்ஸ் போன்றவற்றை விட முன்னுரிமை தரக்கூடியதாகும். பரந்த அளவில் செய்யப்படும் மதிப்பீடுகள் நிதி மேலாளருக்கு நடுத்தர முதலீடுகள், சிறிய முதலீடுகள் போன்றவற்றின் செயல்திறனை பணமாக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

5. செலவு விகிதம்

செலவு விகிதம் என்பது, விற்பனை செலவுகள், விளம்பரம், தரகுக் கட்டணங்கள் போன்ற செலவுகளின் காரணமாக நிதித்திட்டத்தின் மீது சொத்து நிர்வாக நிறுவனம் வசூலிக்கும் தொகையின் அளவு ஆகும். செலவு விகிதம் அதிகரிக்கும்போது முதலீட்டாளா்களின் வருவாய் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு எஸ்.பி.ஐ. திட்டத்தின் எஸ்.பி.ஐ. ப்ளூ சிப் நிதியில் செலவு விகிதமானது, இதர பங்குச் சந்தை பரஸ்பர நிதித்திட்டங்களின் 2.2 மற்றும் 2.3 சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது இதில் வெறும் 1.97 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.

செலவு விகிதமானது வருவாயைக் குறைக்கிறது. ஆனால். பரஸ்பர நிதிகளைப் பொறுத்தமட்டில் இது தவிர்க்க முடியாதது. 2% க்கும் குறைவாக இருந்தால் நல்லது. ஆனால், அதற்கும் மேலிருந்தால் ஒருவா் எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்.

 

6. நிதி நிறுவனம் மற்றும் நிதி மேலாளரின் நற்பெயா்

இவை இரண்டுமே உன்னிப்பாகப் பரிசோதனை மற்றும் நிபுணரின் ஆலோசனையை நாட வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கிறது. முதலாவது விஷயம் இரண்டாவது விஷயத்தை விட அதிகக் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. உங்கள் நிதிகளைக் கையாளும் நட்சத்திர அந்தஸ்துடைய மேலாளா்கள் உங்களிடமிருந்து நீண்ட தூரத்தில் இல்லை. ஒரு நல்ல நிதி நிறுவனமானது வலுவான கொள்கைகள் மற்றும் ஆரோக்கியமான நிலையான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு நல்ல அணியை உருவாக்கும். மேலும் இது அவர்களுடைய செயல் திறனிலும் வெளிப்படும்.

7. எக்ஸிட் லோட்

எக்ஸிட் லோட் எனப்படும் வெளியேற்றக் கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்னதாக ஒரு நிதித் திட்டத்தில் இருந்து வெளியேறும்போது வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னதாக உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதாக இருந்தால் பொதுவாக இந்தக் கட்டணம் ஒரு சதவிகிதமாக இருக்கும். ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதன் வெளியேற்றக் கட்டணத்தை ஜாக்கிரதையாகக் கண்காணியுங்கள்.

Have a great day!
Read more...

English Summary

7 Things To Look For, Before Investing In Mutual Funds