லாபத்தில் 74 சதவீத சரிவில் ஏர்டெல்.. காரணம் ஜியோ..!

ஜியோ உடனான விலை போர் பிரச்சனையில் ஏர்டெல் சிக்கித்தவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஒரு காரணத்தினாலே ஏர்டெல் கடந்த 5 காலாண்டுகளாகத் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வருகிறது.

லாபம்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் வெறும் 97.3 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.

74 சதவீத சரிவு

மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஏர்டெல் லாபத்தில் 17 சதவீத லாபத்தைப் பெற்றுள்ளது, அதே கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 73.5 சதவீத சரிவை அடைந்துள்ளது. 2017ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 367.30 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 2.3 சதவீதம் வரையில் அதிகரித்து 20,080 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்கள்

ஜூன் காலாண்டு முடிவில் ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது 457 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது கடந்த வருடத்தை விடவும் 21.2 சதவீதம் அதிகம்.

Have a great day!
Read more...

English Summary

Airtel's profit falls 74% to ₹97 crore in June quarter