வோடபோன்-ஐடியாவுக்கு இறுதி ஒப்புதல்.. அசைக்க முடியாத 35%..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஐடியா செல்லுலார், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஜியோ அறிமுகத்திற்குப் பின் இணையத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்தது.

பிரதமர் அலுவலகம்

இந்தப் பணிகளில் காலத் தாமதமாகி வந்த நிலையில், பிரதமர் அலுவலகம் டெலிகாம் துறையில் இந்நிறுவனங்களின் இணைப்பு பணிகளை விரைவாக முடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டது. இதன் பிடி டெலிகாம் துறையும் பணிகளை வேகப்படுத்தியது.

இறுதி ஒப்புதல்

இதன் வாயிலாகத் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இணையத் தொலைத்தொடர்பு அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

35 சதவீத சந்தை

இரு நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின் இந்திய டெலிகாம் சந்தையில் சுமார் 35 சதவீத சந்தையை இக்கூட்டணி நிறுவனம் பெற உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 430 மில்லியனாக உயரப் போகிறது.

ஜூன் காலாண்டு முடிவில் ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது 457 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

நிலுவை தொகை

தொலைத்தொடர்பு துறைக்கு இரு நிறுவனங்களும் இணைந்து தங்களது நிலுவை தொகையான 7,268.78 கோடி ரூபாயைச் செலுத்தியதன் விளைவாகத் தற்போது இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது டெலிகாம் துறை.

Have a great day!
Read more...

English Summary

Govt gives final nod to Vodafone-Idea merger