ரூ.9,500 கோடி லாபத்தில் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 9,459 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது மார்ச் காலாண்டு விடவும் 17.9 சதவீதம் அதிகமாகும்.

வருவாய்

அதேபோல் ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருவாய் 1,41,699 கோடி ரூபாயாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் 9.7 சதவீதமும், கடந்த நிதியாண்டை விடவும் 56.5 சதவீதமும் அதிகமாகும்.

சுத்திகரிப்பு

இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவில் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் நுகர்வோர் சந்தையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதால் கடந்த நிதியாண்டை விடவும் 56.5 சதவீத அதிக வருவாயை அடைந்துள்ளது.

ஒரு பங்கு வருமானம்

இதன் மூலம் ஜூன் காலாண்டில் ஒரு பங்கிற்கான வருமானம் கடந்த நிதியாண்டின் 13.5 ரூபாய் என்ற நிலையை விட 16 ரூபாய் என்ற அதிக வருமானத்தை அளித்துள்ளது.

ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் மூலம் சுமார் 25,890 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ள இது கடந்த நிதியாண்டை விடவும் 124 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டிஜிட்டல் சர்வீச் வர்த்தகத்தின் மூலம் 9,653 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

Read more about: reliance industries q1 profit loss

Have a great day!
Read more...

English Summary

Reliance Industries Q1 net profit rises to Rs 9,459 crore