முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...!

நமக்கென ஒரு சொந்த வீடு என்பது நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கின்றது. இந்தக் கனவை நனவாக்க நாம் படும்பாட்டை வார்த்தைகளினால் விவரிக்க இயலாது. அதில் குறிப்பிடத்தக்க அவஸ்தைதான் வீட்டுக் கடன். வீட்டுக் கடனைப் பெற ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கிய அனுபவம் இல்லாமல் வீடு வாங்கிய அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே. இந்த அவஸ்தைகளை முடிவுக்கு கொண்டுவர முன்னரே அங்கிகரிக்கப்பட்ட வீட்டுக்கடன் கை கொடுக்கின்றது.

Advertisement

முன்னரே அங்கிகரிக்கப்பட்ட வீட்டுக்கடன் பெற்றவர்கள், அந்த வீட்டுக்கடனுக்கு ஆதரவாக வலிமையான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் வாதங்களைப் புறந்தள்ளுங்கள். வீடு வாங்க விரும்பும் நமக்கு என்னென்ன தேவை என்கிற அடிப்படையில் இந்த விஷயத்தை சற்று அலசுமோமா? உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வீட்டை பார்த்து அதை வாங்க ஆசைப்படுகின்றீர்கள். அதற்காக ஒரு வங்கியில் வீட்டுக்கடனுக்காக விண்ணப்பம் செய்கின்றீர்கள். வங்கியானது உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றது. அப்பொழுது நீங்கள் ஆசையுடன் பார்த்து வைத்த வீடு உங்களுக்காக காத்திருக்குமா? சரியான சொத்துக்களைக் கண்டுபிடித்துவிட்டு, வங்கிக் கடனை எளிதில் வாங்க முடியாத நிலையில் இருப்பதால், நம்மில் பலரும் வீடு வாங்கும் ஆசையை துறந்து விடுகின்றனர்.

Advertisement

இரண்டாவதாக, முன்னரே அங்கிகரிக்கப்பட்ட வீட்டுக்கடனானது உங்களுடைய நிதி நிலையை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவுகிறது. உங்களுடைய வயது, வருமானம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் உங்களுடைய தற்போதைய நிதி நிலைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரூ 50 லட்சத்தை 20 ஆண்டு காலத்திற்கு கடனாக ஒரு வங்கி உங்களுக்கு வழங்குகின்றது எனில், உங்களுடைய தகுதியானது ரூ 50 லட்சம் என உங்களுக்குத் தெரிய வரும். மூன்றாவதாக, வீடு கட்டிக் கொடுக்கும் விற்பனையாளர் / டெவெலப்பர், ஏற்கனவே உங்களிடம் முன்னரே அங்கிகரிக்கப்பட்ட வீட்டுக்கடன் இருப்பதை அறிந்தால், உங்களிடம், மிகவும் உண்மையான நோக்கத்துடன் மட்டுமே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவார். வங்கி வேலை ஏற்கனவே முடிந்து விட்டதால், நீங்கள் முன்னரே கற்பனை செய்ததை விட மிகவும் வேகமாக வீட்டுக் கடன் வாங்க முடியும். முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனைப் பொருத்தவரை வீட்டுக்கடன் நடைமுறை பொதுவாக, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படுகிறது. கடன் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஒரு வேளை உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களால், ஒரு இணை விண்ணப்பதாரரை சேர்க்க முடியும். அவ்வாறு செய்யும் பொழுது உங்களுடைய கடன் வரம்பு கண்டிப்பாக உயரும்.

Advertisement

முன்பே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனைப் பெறும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி மேலே அலசினோம். எனினும் முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனை வாங்கும் முன்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செலவு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு எந்தவொரு செயலாக்க கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. இருப்பினும், பெரும்பாலான தனியார் வங்கிகள் 1,000-2,000 ரூபாய் வரையிலான ஒரு நிலையான தொகையை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கின்றன. இந்த வீட்டுக் கடனுக்கான கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களால் வீட்டுக் கடன் பெற முடியாவிட்டால், நீங்கள் இந்த பணத்தை இழப்பீர்கள்.

Advertisement

மேலே குறிப்பிடப்பட்ட அம்சம் நம்மை இரண்டாவது விஷயத்தை நோக்கி நகர்த்துகின்றது.

கால வரம்பு: நீங்கள் முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக்கடனை வாங்கும் பொழுது, அதற்கான ஒப்பந்தத்தில் கால வரையறை குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டுக் கடனைப் பெற வேண்டும். இது வங்கியினை பொறுத்து, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மாறுபடும். நீங்கள் உங்களுக்கான வீட்டை தேர்ந்தெடுப்பதில் தோல்வியடைந்தால், உங்களுடைய வீட்டுக் கடன் ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். வீட்டுக் கடனுக்காக, நீங்கள் செலுத்திய செயலாக்க கட்டணத்தையும் இழந்து விடுவீர்கள். இத்தகைய சூழ்நிலையில், முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனைப் பெற நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

உங்களுடைய தோல்வி மூன்றாவது விஷயத்தை நம்முன்னர் நிறுத்துகின்றது.

கிரெடிட் ஸ்கோர் விளைவு: வீட்டுக் கடனைப் பெறுவதற்கான உங்களுடைய தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் உங்களுடைய தொடர் தோல்விகள், உங்களுடைய கடன் மதிப்பீட்டை கடுமையாக பாதிக்கும். ஒரு வேளை உங்களுடைய வீடு வாங்கும் திட்டத்தில் ஏதேனும் மாறுதல் இருக்கும் என நீங்கள் நினைத்தால், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

வட்டி விகித மாற்றம்: முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனை வாங்க வங்கியின் அதிக வட்டி கூட காரணமாக இருக்கலாம். கடன் ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் வரை தற்போதைய வட்டி விகிதம் செல்லுபடியாகும் என்று கருதுவது தவறு. உங்களுடைய முன்னரே அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடனானது ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கலாம், எனினும் தொடக்கத்தில் வீட்டுக் கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வட்டி விகிதமானது ஒவ்வொரு மாதமும் மாறும்.

Advertisement

சொத்து மதிப்பீடு: உங்களுக்கு வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இன்னும் கடன் மற்றும் சொத்து மதிப்பீட்டு விகிதத்தை மதிப்பீடு செய்யவில்லை. ஏனெனில் கடனை அங்கீகரிக்கும் பொழுது உங்களுக்கான வீட்டை நீங்கள் உறுதி செய்யவில்லை. நீங்கள் உங்களுக்கான வீட்டை தேர்வு செய்து விட்ட பின்னரே இந்த மதிப்பீடு தொடங்கும். உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் தொகை உங்களுடைய வீட்டின் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். உதாரணமாக உங்களிடம் முன்னரே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் மதிப்பு ரூ 50 லட்சம் இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். எனினும் நீங்கள் தேர்வு செய்த வீட்டின் மதிப்பு ரூ 50 லட்சத்திற்கும் குறைவு எனில், உங்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு வீட்டுக் கடன் கிடைக்காது.

நிதி நிலையில் மாற்றம்: உங்களுடைய தற்போதைய நிதி நிலைகளில் ஏற்படும் எந்த விதமான சிறு மாற்றங்களும் உங்களுடைய வீட்டுக் கடனின் இறுதித் தொகையின் அளவைப் பாதிக்கும். உதாரணமாக, நீங்கள் வேலையில் இருந்து நின்று விட்டால், வங்கியானது உங்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம்.

சட்டக் குறிப்பு: சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சொத்திற்கு வங்கிகள் ஒருபோதும் நிதியளிக்க முன் வராது என்பதை மனதில் கொள்ளுங்கள். அங்கீகரிக்கப்படாத பகுதிகள் மற்றும் மிகவும் பழமையான கட்டங்களுக்கு எந்த ஒரு நிதி நிறுவனமும் கடன் அளிக்க முன்வருவதில்லை.

English Summary

The Thing About Pre Approved Loans
Advertisement