புதிய பெற்றோர்களே! உங்களுக்கான நிதி திட்டமிடல் டிப்ஸ்..!

குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு என்பது சவாலானதாகவும், அதிகப் பொறுப்பு தரும் ஒன்றாகவும் இருக்கும். புதிய பெற்றோராக ஒருவர் குழந்தையின் அனைத்து வித தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் நிதி நிலைமையில் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்த வேண்டும்.

புதிய பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளின் படிப்பு போன்ற நீண்ட காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு குறுகியகாலச் செலவுகளைத் தவிர்ப்பதால், குழந்தையின் துவக்க ஆண்டுகளில் வளர்ச்சியின் போது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்த வழிவகுக்கிறது.

புதிய பெற்றோர்களுக்கு உதவும் வகையில், இங்கே வழங்கப்பட்ட சில ஆலோசனைகளை நிதி திட்டமிடலின் போது பயன்படுத்தினால் ஒட்டுமொத்த பாதுகாப்புடன் குழந்தையை வளர்க்கலாம். எனவே எவ்வித மனவழுத்தமும் இன்றி உங்களுக்குக் கிடைத்த பட்டமான பெற்றோர் எனும் வரப்பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

பிரசவத்திற்கு முந்தைய செலவுகள்

பிரசவத்திற்கு முந்தைய திட்டமிடல் என்பது மாதாந்திர பரிசோதனை மற்றும் பிரசவம் வரையிலான செலவுகளுக்கான பணத்தைச் சேமிப்பது மட்டுமல்ல. வீட்டிற்கு வரும் பணம் இரு வருவாயில் இருந்து ஒன்றாகக் குறையும், அதிலும் குறிப்பாகத் தாய் தனது வேலையை இராஜினாமா செய்யும் போது. இந்தத் திட்டமிடல் தாய்மையடைந்த துவக்கக் காலத்திற்கும் பொருந்தும்.

அதுமட்டுமின்றி, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனை செலவுகள் முழுவதுமாக மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராது என்பதால், அந்தச் செலவுகளைச் சமாளிக்க ரொக்க பணத்தைச் செலவாளிக்க வேண்டி வரலாம். மேலும் கர்ப காலத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

எனவே உங்களுக்குச் சாத்தியமான ஒன்றான மாதாமாதம் குறிப்பிட்ட அளவு தொகையை( தொடர் வைப்புநிதி திட்டம் போன்று) குழந்தைக்குத் திட்டமிடும் போதே சேமிக்கத் துவங்கலாம்.

 

பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகள்

தடுப்பூசி மற்றும் தாய் சேய்க்கான மருத்துவப் பரிசோதனைகள் என்பது பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகளில் அடங்கும். இதற்காக நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஏனெனில் பிரசவம் மற்றும் அவசர சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவமனை செலவுகளும் அதில் அடங்கும்.

மருத்துவத்தைத் தவிர்த்து, குழந்தைக்கான உணவு, துணிமணிகள், வீட்டுஉபயோக பொருட்கள், டைப்பர் போன்ற செலவுகளும் இருக்கும். இவை குழந்தைகள் வளரும் 3-4 ஆண்டுகளுக்கு உங்களின் மாதாந்திர செலவுகளில் சேர்ந்துகொள்ளும்.

 

மாதாந்திர நிதிநிலை அறிக்கை

குழந்தை பெற்ற பிறகு, குழந்தையை வளர்ப்பதற்குத் தேவைப்படும் பொருட்களால் ஓராண்டிற்குள் உங்களின் வாழ்க்கைமுறையை மாறிவிடும். மேலும் குழந்தைக்குச் சிறப்பானதை முடிந்த அளவு தரவேண்டும் என்ற உணர்வால், அதிக விலையுள்ள குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கவேண்டும் என நினைப்பீர்கள்.

சில பொருட்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது என்றாலும், பேபி கார் சீட், பேபி சூ, அதிகப்படியான துணிகள் போன்று பெருமைக்குச் செய்பவற்றைத் தவிர்க்கலாம். இதுபோன்ற தேவையில்லாதவற்றுக்குச் செலவு செய்யும் பணத்தைப் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பயன்படும்.

 

ஆயுள் காப்பீடு மற்றும் உயில்

சிலநேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் போது, குழந்தைகளை ஆபத்தில் விட்டுவிடாமல் இருக்கத் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பரஸ்பர நிதி மற்றும் இதர முதலீடுகளைச் செய்வது மட்டுமின்றி, ஆயுள் காப்பீடு உள்பட உங்களின் அனைத்து முதலீடுகளிலும் அவர்களை வாரிசுதாரராக நியமிக்க வேண்டும்.

கூடுதலாக உங்களின் அனைத்துச் சொத்துக்களும் குழந்தைகளுக்குச் செல்லும் வகையில் உயில் எழுதி வைத்து ,நம்பகமான ஒருவரைப் பாதுகாவலராக நியமிக்கலாம்.

 

கொண்டாட்டங்கள், கல்வி, திருமணம்

குழந்தையின் பிறந்தநாள் விழா மற்றும் இதர பாரம்பரிய விழாக்கள் குறுகிய கால எதிர்பார்த்த முதலீடாக இருத்து, நிரந்தர/தொடர் வைப்புநிதி அல்லது குறுகிய கால நிதி முதலீடு செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

உயர்கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு, நீண்ட கால முதலீடான வகைப்படுத்தப்பட்ட பங்கு நிதி அல்லது தங்கம் போன்றவற்றில் திட்டமிடலாம்.

 

அவசரக்கால நிதி

அவசரக்கால நிதி என்பது குழந்தைகளுக்கானது மட்டுமின்றி, வேலை இழப்பு போன்ற எதிர்பாரா சூழ்நிலைகளுக்கும் தேவைப்படும். அது போன்ற சூழ்நிலையில், குறைந்த பட்சம் 6 மாதங்களுக்குத் தொடர் முதலீடுகள் மற்றும் பள்ளிகட்டணம் போன்ற அடிப்படை செலவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவசரக்கால நிதியைச் சேமிக்க வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

Financial Planning Tips for New Parents