இந்த 8-ம் உங்களிடம் இருந்தால் உலகத்தை நீங்களும் அட்டிப்படைக்கலாம்..!

செல்வாக்கு, புகழ், பொருளாதாரத்துக்கு ஆசைப்படாதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. கனவு நனவாக அபிலாஷைகள் மட்டும் போதாது. வழி தெரியாமல் திகைக்கும் நீங்கள் உங்களுக்கு முன்மாதிரியாகச் சிலரை பின்பற்றத் தொடங்குங்கள். அவர்கள் அம்பானியாகவோ, தோணியாகவோ இருக்கலாம். இவர்களின் துணிச்சலான முடிவுகள் தான் வெற்றிகரமான மனிதர்களாக மாற்றியிருப்பதை உணர்வீர்கள்...

ஆட்டிப்படைக்கும் மனிதர் என்ற கூற்று, ஆட்டிப்படைக்கும் ஒரு அருவருப்பான வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால் ஆட்டிப்படைக்கக்கூடிய அபூர்வ குணாம்சம் இல்லாவிட்டால் வெற்றியை ருசிக்க முடியாது. எதைச் செய்து கிழித்தோம் என்று திருப்தியடையாத மனிதர்களால்தான் அடுத்தடுத்த இலக்குகளை அடைய முடிகிறது. அதற்கு ஒரு 8 ஆலோசனை உள்ளது. இதனைப் படிப்பதற்காகவாவது நீங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

தைரியம், திராணி

நீங்கள் ஒரு மீளமடியாத கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, சுவாரஸ்யமான சிந்தனை ஒன்று உங்களைத் தூண்டுவதற்குக் காரணமாக அமையும். அப்போது நீங்கள் கவலைகளை உதறிய சிங்கமாகத் தோன்றுகிறீர்கள். ஏனென்றால் தைரியம்தான் சரிவிலிருந்து மீட்கும் ஆற்றல்மிக்க நிவாரணி.

பள்ளி விளையாட்டு அணியில் இருந்து நீக்கப்பட்ட மிக்கேல் ஜோர்டானை கூடைப்பந்து விளையாட்டிலும், பவுலின் தைரியமான மூலதனம், வெப்சைட் உலகின் ஜாம்பவானாக ஆக்கியதும் தைரியம் தான்.
ஏனென்றால் தைரியம் பயம் இல்லாதது அல்ல. பயத்தை விடத் தைரியம் முக்கியமானது என்கிறார் எழுத்தாளர் அம்புரோஸ் ரெட்.

 

திட்டமிடல்

அன்றாடம் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட வேண்டும். முன்னுரிமை வழங்கிய செயல்களும், இலக்குகளும் நடக்காமல் போகலாம். ஆனால் திட்டமிடுதல் அவசியம். வெற்றிகரமான மனிதர்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சந்திப்புகளுக்குப் பின்னால் நோக்கம் ஏதுமில்லை என்று கருதினால், அன்றைய நாளை வீணாக்க மாட்டார்கள். எந்த வேலையும் இல்லை என்று கருதும் பட்சத்தில் அவர்கள் புத்தகங்கள் வாசிப்பார்கள். அல்லது அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய காரியம் பற்றி யோசிப்பார்கள்.

வாய்ப்புகள் பற்றிய சிந்தனை

ஆட்டிப்படைக்கும் மனிதர்களிடம் இருக்கும் கோபம் அவர்களைத் திசை திருப்புவதில்லை. புதிய வாய்ப்புகள், கண்டுபிடிப்புகள் பற்றியே சதா சிந்திக்கிறார்கள். செய்த காரியங்களில் ஏற்படும் விளைவுகளையும் அதிலிருந்து பாடங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். ஒன்றை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் சிறந்த வழிகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

கவனம்- ஆற்றல்

வெற்றிகரமான மனிதர்கள் சாதாரணமாகத் தேநீருக்காகக் காத்திருப்பதோ, கடைத்தெருவுக்குப் போய்க் காலத்தைக் கழிப்பதோ கிடையாது. இலக்கை அடையும் வரை வேறு எதையும் அவர்கள் சிந்திப்பதில்லை. அந்த ஒன்றை அடைவதற்காக முழுச் சக்தியையும், கவனத்தையும் செலவிடுகிறார்கள்.

NO என்பது தாரக மந்திரம்

வீடுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் NO என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்ற வார்த்தைதான் ஆட்டிப்படைப்பவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. வெற்றிகரமான மனிதர்கள் NO என்ற நெகட்டிவான வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று கேட்கலாம். YES என்ற வார்த்தை அபிலாஷைகளும், இலட்சியங்களையும் அடைவதற்குத் தடையாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பழி சுமத்துவதில்லை

வெற்றிகரமான மனிதர்கள் யார் மீதும் குற்றம்சாட்டுவது கிடையாது. எல்லாப் பொறுப்புகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தனது நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும்போது அரசாங்கத்தையோ, வாடிக்கையாளர்களையோ குற்றம் சுமத்த மாட்டார்கள். தோல்வியைப் பாடமாக ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்த வணிக முயற்சிகளுக்கு வியூகங்களை வகுக்கிறார்கள்.

பாடம் கற்கும் பண்பு

தொழில் முனைவோர் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த திறமையை, சிந்தனையைப் பெற 10 ஆயிரம் மணி நேரம் ஆகும் என்கிறார் மால்கம் கிலாடுவெல் என்ற அறிஞர். அடுத்தவரின் சாதனைகளைப் பாடமாக எடுத்துக் கொண்டு சொந்த வெற்றியைத் தீர்மானிக்க முயற்சிப்பவர்கள் தான் வெற்றிகரமான மனிதர்களாக இருக்க முடியும். அந்தப் படிப்பினை ஒரு புத்தகத்திலிருந்தோ, பேராசிரியர் மூலமாக, ஒரு வணிகர் மூலமாக வரலாம்.

நம்பிக்கை இல்லை

ஆட்டிப்படைக்கும் நபர்கள் டேலண்ட் மீது நம்பிக்கை கொள்வதில்லை. ஆட்டிப்படைப்பதில் டேலண்ட் இருப்பதில்லை. சாதாரண மனிதர்கள் தான் என்கிறார் கோனர் மெக்ஜார்ஜ். நான் ஆட்டிப்படைப்பவன் என்னிடம் டேலண்ட் கிடையாது என்றும் பெருமிதம் பேசுகிறார். ஆட்டிப்படைக்கும் பண்பு இல்லாமல் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்க முடியாது.

Read more about: successful
Have a great day!
Read more...

English Summary

Reasons Why Obsessive People Are More Likely to Be Successful