வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த உள்ளீர்களா? தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி?

மச்சு வீடோ குச்சு வீடோ சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர்கள் வரை வீட்டுக்கடனைப் பெற வங்கிகளை எதிர்பார்க்கிறார்கள். சிலநேரங்களில் வீட்டுக் கடன்கள் அவர்களைக் கனவிலும் கூடத் தொல்லை செய்கிறது. ஆகையால் நீண்ட கால வீட்டுக் கடன்களைப் பெறும்போது, தவணை முறைகளையும் கவனமாகத் திட்டமிட்டு கையாள வேண்டும்

ஆகப் பெரும்பாலானோர் ஒரு கனவு வீட்டைக் கட்டி முடக்கவோ, வாங்கிப் போடுவதற்காகவோ வங்கிக் கடன்களை வாங்குகிறார்கள். இன்னொரு சாஸ்வதமான அசையாச் சொத்துக்களால் வருமான வரிச்சட்டம் 80 மற்றும் 24 ஆம் பிரிவுகளின் கீழ் வட்டி செலுத்துவதில் இருந்து இன்னபிற சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணமும் வீட்டுக் கடன்களை வாங்கத் தூண்டுகிறது. அதேநேரம் இதில் சங்கடங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்டகாலக் கடன்கள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைப்பதாக அமையும். இதனைக் கடந்து செல்ல உங்கள் தவணைகளைச் சரியாக நிர்வகி க தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் எங்களால் ஆன சில குறிப்புகளை உங்களுக்குத் தருகிறோம்.

தவணை காலம் தேர்வு

கடனுக்கான தவணைத் தொகை கையைக் கடிக்காமல் இருப்பதற்காக நீண்டகாலக் கடன்களைத் தேர்வு செய்கிறோம். குறைந்த தொகையைத் தவணை தவறாமல் எளிதாகச் செலுத்திவிட முடிகிறது.எனினும் நீண்ட காலத்துக்கு வட்டி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடன்தொகை அதிகரிக்கிறது. இதனால் கடனாளிக்கு கூடுதல் சுமைதான்.

ஆகையால் வீட்டுக்கடன்களைத் தேர்வு செய்யும்போது, உங்கள் வயது, வருமானம் மற்றும் கடனை அடைக்கும் திறனை மனதில் இருத்த வேண்டும். வீட்டுக் கடன்கள் அதிகக் கடன்தொகையைக் கொண்டிருப்பதால் கடனாளிகள் குறுகிய காலக் கடனுதவியைக கண்டறிதல அவசியம், இது மற்றவர்களின் வாழ்முறை ம்ற்றும் வட்சியங்களில் சமரசம் செய்யாமல் இருக்க வேண்டும்.

இதர தவணைக்காலங்கள் குறித்து ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். கடன் தொகை. வட்டி, தவணைக் காலம் குறித்துத் தெளிவு பெறலாம்.

 

தவணைத்தொகையை உயர்த்தல்

ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பெறும்போது, திரப்பிச் செலுத்தப்படும் கடனுக்கான தவணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். ஈ.எம்.ஐ தொகையை உயர்த்திச் செலுத்தும்போது தவணைக்காலம் தானாகவே குறைகிறது. மேலும் நிலுவையில் உள்ள கடன் தொகையும் கணிசமாகக் குறையும்.மீண்டும் தவைணத்தொகையைக் குறைவாகச் செலுத்தினால் கடன்தொகை கழியாது. சுமைதான் அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, 50 லட்கம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளுக்குத் தவணைக்காலத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவணைதொகைபில் 10 விமுக்காடு அதிகரித்துச் செலுத்தும்போது தவணைக்காலம் 10 வருடமாகக் குறையும்.

 

கடன்தொகையை முன்கூட்டி செலுத்தல்

தவணை காலம்வரை காத்திருக்காமல் கடனை முன்கூட்டியே செலுத்துவதால், நிலுவையில் கடனையும், தவணைக் காலத்தையும் ஒரு சேர் குறைக்கலாம். இதற்கு வங்கிகள் தண்டம் விதிக்க முடியாது. பிரதான கடன்தொகையை நேரடியாகக் குறைக்க உதவுவதோடு வட்டிச் செலவினங்களையும் குறைக்க இது உதவுகிறது.

எடுத்துக்காட்டாக அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,20,000 ருபாய் முன்கூட்டியே செலுத்தினால் மாதம் 10,000 ரூபாய் சேமிக்க முடியம். தவணைக் காலத்துக்கு முன்னரே கடன் தொகை முடிவடையும்.

 

கடன் சமநிலைப் பரிமாற்ற தேர்வு

வீட்டுக்கடன் பெறுபவர்கள் சாதகமான கடன்சமநிலைப் பரிமாற்றத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உங்களுக்குக் கடன் அளிக்க இருப்பவர், போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதம், இதர சேவைகளைத் தர மறுக்கலாம். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் கடன் வாங்கியவர்கள் பொதுவாகத் தங்கள் வட்டிக்கு ஒரு முக்கியப் பகுதியைச் செலுத்தி இருப்பார்கள் என்பதால், வீட்டுக் கடன் சமநிலை பரிமாற்றமானது மீண்டும் ஒரு நீண்ட காலக் கடன் சேமிப்புக்கு உதவாது. உங்கள் தற்போதைய வீட்டு கடன் கவணைக் காலத்தைப் போலப் புதிய கடன் கவணைக் காலக் கடனை பெறும்போது கூடுதல் வட்டி சுமையைக் குறைக்கும். கூடுதலாக, புதிய கடனுக்கான நீண்ட தவணைக் காலத்தைத் தேர்வு செய்வது, EMI சுமையை எளிமையாக்கும்

ஒரு நல்ல கடன்சமநிவைப் பரிமாற்றத்தேர்வு செயலாக்கக் கட்டணம் இன்ன பிற செலவுகளில் இருந்து காப்பாற்றும்.

Have a great day!
Read more...

English Summary

Want to close your home loan early? Manage your EMIs smartly; Here’s how