ஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..!

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு தனது முன்னணி உற்பத்தி பொருட்களை விநியோகம் கூட்டணி நிறுவனமான ஹோலிடெக் டெக்னாலஜி கோ ஆஃப் சீனா மூலம் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

ஆந்திரா பிரதேசம்

ஹோலிடெக் டெக்னாலஜி மூலம் சியோமி இந்தியாவில் சுமார் 1400 கோடி ரூபாய் முதலீட்டில் ஆந்திரா பிரதேச, திருப்பதியில் புதிய தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆந்திராவில் 6,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

 

75 ஏக்கர்

திருப்பதியில் ஹோலிடெக் டெக்னாலஜி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் 2 பகுதியாக 700 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

முக்கியப் பொருட்கள்

இத்தொழிற்சாலையில் காம்பெக்ட் கேமரா மாடியூல், தின் பிலிம் டிரான்சிஸ்டர், கபாசிடிவ் டச் ஸ்கிரீன் மாடியூல், பிலெக்சிபில் பிரின்டெட் சர்கியூட்ஸ் மற்றும் பிங்கிர்பிரின்ட் சென்சர் ஆகியவற்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த உற்பத்தி வேலையை 2019ஆம் ஆண்டு முதல் துவங்கவும் திட்டமிட்டுள்ளது சியோமி.

 

50 மில்லியன்

இப்புதிய தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு 50 மில்லியன் யூனிட்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 3 வருடத்திற்குப் பின் 2 பில்லியன் டாலர் வருமானத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

சீனா

சியோமி நிறுவனத்திற்குச் சுமார் 16 உற்பத்தி தளங்கள் உள்ளது, இந்தியாவில் முதல் முறையில் தனது சொந்த முதலீட்டில் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

 

இலக்கு

இந்தியாவில் 15,000 கோடி முதலீடு செய்து 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு தனது இலக்காக நிர்ணயம் செய்யும்.

Have a great day!
Read more...

English Summary

Xiaomi’s supplier to set up Rs 1,400 crore plant