இதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்!

அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரான ஜாக் மா திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ நகரத்தில் தொடங்கப்பட்ட அலிபாபா இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

11 வருடங்களுக்கு மேலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் மா இருந்த நிலையில் பலருக்கு முன்மாதிரியாகவும் உள்ளார். எனவே நீங்களும் ஜாக் மா ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தால் இந்தக் கட்டுரை அதற்கு வித்திடும்.

அவரது தலைமைத்துவ அணுகுமுறை

அறிவார்ந்த மக்களை வழிநடத்த ஒரு முட்டாள் வேண்டும். விஞ்ஞானிகளுடன் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் ஒரு விவசாயியை வழிநடத்துவது சிறந்தது என்று ஜாக் மா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சிந்தனை வித்தியாசமானது. நீங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்து மக்களைப் பார்த்தால் வெற்றிபெற முடியும் என்று எப்போதும் கூறுவார்.

நிர்வாகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

ஆண்களை விடப் பெண்கள் அதிகப் புரிதலை உடையவர்கள், கடவுள் கொடுத்த மிகப் பெரிய ஆயுதத்தில் பெண்கள் ஒன்று. அவர்கள் சகிப்புத்தன்மையைப் புரிந்துகொள்கிறார்கள் என்று பெண்களுக்கு நிர்வாகத்தில் முன்னுரிமை அளிப்பவர் ஜாக் மா.

விடாமுயற்சியின் முக்கியத்துவம்

இன்று கடிமான நாளாக இருக்கும். நாளை மிகவும் கடினமாக நாளாக இருக்கும். ஆனால் நாளைய மறுநாள் அழகான ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உடையவர்.

தீர்மானம்

நாம் எப்போதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது, உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உண்டு. விட்டுக்கொடுப்பது மிகப் பெரிய தோல்விக்கு உங்களை இட்டுச்செல்லும் என்பார் ஜாக் மா.

இ-பே உடனான போட்டி

கடலில் உள்ள திம்மிங்களமாக இ-பே இருக்கலாம், ஆனால் நான் நதியில் உள்ள முதலை. நாம் கடலில் சண்டையிட்டால் தோற்றுப்போவோம், இதுவே நதியில் என் வெற்றியைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலாண்மைக்கான முன்னுரிமைகள்

முதலில் வாடிக்கையாளர்கள், இரண்டாவது முதலாளிகள், மூன்றாவது தான் பங்கு தாரர்கள் என்ற மேலாண்மைக்கான முன்னுரிமையுடன் நிர்வாகத்தினை ஜாக் மா வழி நடத்தினார்.

போட்டியாளர்களின் திசைதிருப்பல்

உங்கள் போட்டியாளர்களைக் கண்டுகொள்ளாதீர்கள், உங்கள் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள் வளர்ச்சி நம்மைத் தேடி வரும் என்று ஜாக் மா கூறுவார்.

தொழில்நுட்பம்

தன்னைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பம் உலகத்தினை மாற்றும். அதன் கனவும் உலகத்தினை மாற்றுவதாகவே இருக்கும் என்ற தொழில்நுட்ப பார்வையை உடையவர்.

சரியான நார்களைப் பணிக்கு எடுப்பது

பணத்தைச் செலவு செய்வதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. கனவு உள்ள நபர்களுக்குத் தான் இங்குத் தேவை, தன் கனவு வெற்றி பெற இறக்கவும் நேரிடலாம். அப்படிப்பட்டவர்களைத் தான் பணிக்கு எடுக்க விரும்புவேன் என்பார் ஜாக் மா.

இளம் தொழிலாளர்களுக்கு எப்படி இருக்க வேண்டும்?

இளைஞர்கள் எதிர்காலத்திற்காகப் பிரமிப்புடன் காத்திருந்தால், தற்போதைக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும், கடந்த காலத்திற்கு நன்றியுடன் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

சீனாவின் இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் ஈடுபாடு பற்றி

பேஸ்புக் மற்றும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வரும் போது விதிகளை மதிக்க வேண்டும். கூகுள் அவர்களாகவே தான் வெளியேறினார்கள் - நாங்கள் துறத்தவில்லை. ஒரு நாட்டில் வணிகம் செய்யும் போது அவர்களின் விதிகள் மற்றும் சட்டங்களை மதித்துச் செயல்பட வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிதால் நீங்களும் நாளைய ஜாக் மாவாக இருக்கலாம்.

 

Have a great day!
Read more...

English Summary

ஜாக் மா, நிர்வாகம், Jack Ma, Management