என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் பல லட்சம் இந்தியர்களுக்குப் பயனுள்ள வகையில் முதலீடு செய்த சிறந்த பங்குகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

குறுகிய கால முதலீடு

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முதலீடு செய்ய நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள முன்னணி நிறுவனங்களைப் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு குறுகிய கால முதலீட்டுக்குச் சிறந்த 8 நிறுவனங்களைப் பரிந்துரை செய்கிறது மோர்கன் ஸ்டான்லி.

மைக்ரோசாப்ட்

இந்நிறுவனத்தின் கிளவுட் கம்பியூடிங் சேவையான அசூர் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சி அடையும் என்பதால் இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பங்குகள் 110 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

 

சிஸ்கோ முதல் நெக்ஸ்ட்எரா

அதேபோல் சிஸ்கோ நிறுவனம் 50 டாலர் வரையும், டிஸ்னி 130 டாலர் வரையும், நெக்ஸ்ட்எரா 168 டாலர் வரையில் உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

டிமொபைல்

இதைத் தொடர்ந்து E*Trade நிறுவனம் 64 டாலர் வரையும், க்னைட் ஷிப்ட் 60 டாலர் வரையும், லியான்டெல் பேசெல் 130 டாலர் வரையும், டிமொபைல் யூஎஸ் 74 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

8 Stocks for Big Short Term Gains For NRI's - Tamil Goodreturns | என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்