பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் எப்போது வெளியேற வேண்டும் என்பது தெரியாது, பங்கு விலை இன்னும் உயரும் அல்லது பங்கு விலை சரிவில் இருந்து மீண்டு வரும் என நம்பி பெரும் தொகையை இழந்துவிடுவார்கள். ஆனால் சந்தையில் முக்கிய புள்ளியாக இருக்கும் பலர் எப்போது வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்வதில் கில்லியாக இருப்பதாலேயே அவர்களால் பெரும் பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

Advertisement

அப்படி இந்திய சந்தையில் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் ஆஷிஷ் கச்சோலியா வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் என்ற டிபென்ஸ், நியூக்ளியர், ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தில் சுமார் 10.45 லட்சம் பங்குகள் அதாவது அந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் சுமார் 1.54 சதவீத பங்குகளை வைத்திருந்தார்.

Advertisement

இந்த தகவல் வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள் விபரத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் ஜூன் காலாண்டு முடிவில் ஆஷிஷ் பெயர் இல்லை, இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு இருப்பை மொத்தமாக விற்று இருக்க வேண்டும் அல்லாது பங்கு இருப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாக குறைத்திருக்க வேண்டும் என்பது உறுதியானது.

பொதுவாக நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் அல்லது உரிமையாளரின் பெயர் வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. சரி வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது..? ஏன் ஆஷிஷ் இந்நிறுவன பங்குகளை விற்பனை செய்தார்..?

Advertisement
அலேக்கா தூக்கிய அதானி! ஆந்திராவில் 8500 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது அதானி எனர்ஜி!

வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை இந்த வரும் மார்ச் மாதத்தில் 131.15 ரூபாய் என்பது 52 வார சரிவை எட்டியது, ஆனால் ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்காத வண்ணம் 141 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 315.80 ரூபாய் அளவீட்டை ஜூன் 19ஆம் தேதி எட்டியது. இதன் மூலம் மார்ச் மாதம் பதிவான 52 வார சரிவில் இருந்து ஜூன் காலாண்டில் 108 சதவீதம் உயர்ந்துள்ளது.

பெங்களூரில் அதிர்ச்சி.. 18 மாடி கட்டிடம்.. அப்படியே சாயுது.. இடிக்க சொல்லி உத்தரவு!
Advertisement

வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிபென்ஸ், நியூக்ளியர், ஏரோஸ்பேஸ் துறையில் அதிளவில் முதலீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தினாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இன்னும் முழுமையாக பெறவில்லை.

இதன் வாயிலாகவே ஆஷிஷ் பங்குகளை விற்பனை செய்ய துவங்கிய பின்பு இந்நிறுவனத்தால் அதன் பங்கு விலையை நிலை நிறுத்த முடியவில்லை. இதன் விளைவு வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 5 சதவீதமும், ஒரு மாதத்தில் 18 சதவீதமும், இன்றைய வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 233 ரூபாயாக குறைந்துள்ளது.