இந்திய பங்குச்சந்தையில் பிரதான முதலீட்டு ஆசானாக இருப்பவர் ஆஷிஷ் கசோலியா. இவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளார். அந்த பங்கு ஏற்கனவே 200% லாபம் தந்த நிலையில் ஆஷிஷ் கச்சோலியா பங்குகளை அதிகரித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Advertisement

ஆஷிஷ் கச்சோலியா, இந்திய பங்குச்சந்தையில் மிக கவனமாக பங்குகளை தேர்வு செய்பவர். எவ்வித விளம்பரங்களும் இன்றி, தனது முதலீட்டு உத்திகள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளார். ஹோட்டல், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறை போன்ற பல்வேறு துறைகளில் இவரது முதலீடுகள் உள்ளன. ஸ்மால் கேப் நிறுவனங்களில் அதிக ஆர்வம் கொண்ட கச்சோலியா, இத்தகைய நிறுவனங்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து முதலீடு செய்வதில் வல்லவர்.

Advertisement

சமீபத்திய காலாண்டு முடிவுகளின்படி, இண்டோ எஸ்எம்சி (INDO SMC Ltd) நிறுவனத்தில் ஆஷிஷ் கசோலியா, தனது பங்குகளை அதிகரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில் அவரது முதலீடும் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தனது பங்குகளை சுமார் 0.57% அளவிற்கு அவர் உயர்த்தியுள்ளார்.

வெறும் 3 நிறுவனங்களில் முதலீடு செய்து ரூ.100 கோடிக்கு அதிபதியான முதியவர்..!!

இந்த நிறுவனம் டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் மின் கட்டுமான அமைப்புகளுக்கு தேவையான பல்வேறு பாகங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. குஜராத் ,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தன்னுடைய உற்பத்தி ஆலையையும் சொந்தமாக வைத்திருக்கிறது.

Advertisement

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 976 கோடி ரூபாய் ஆகும் இதன் ஒரு பங்கின் தற்போதைய மதிப்பு 448.60 ரூபாயாக இருக்கிறது. தன்னுடைய 52 வார கால உச்சபட்ச விலையை இந்த பங்கு மதிப்பு எட்டியிருக்கிறது. இந்த நிறுவன பங்குகளில் 82% பங்குகள் பிரமோட்டர்ஸ் வசமும் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 17.6 எட்டு சதவீத பங்குகளும் உள்ளன. பிப்ரவரியில் இதன் ஒரு பங்கு 140 ரூபாயாக இருந்து 6 மாதங்களில் 448 ரூபாய் என உயர்ந்துள்ளது.

டிராஃபிக்கை வைத்து செம பிஸ்னஸ் ஐடியா..!! ஹர்ஷ் கோயங்காவின் பாராட்டை பெற்ற மும்பை ஸ்டார்ட் அப்..!!
Advertisement

2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமாகி வருகிறது. 2025ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 139 கோடி ரூபாய் வருமானம் மற்றும் 15 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.