Closing Bell (11/09/2018): ரூபாய் சரிவு, விற்று வெளியேறிய முதலீட்டாளர்கள்

காலையில் சந்தை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்து நிலையான ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் தடுமாற்றத்திலேயே வர்த்தகமாயின. மதியத்திற்குப் பின் இறக்கத்தை நோக்கி வர்த்தகமாகத் தொடங்கின.

Advertisement

வர்த்தக நேர முடிவில் 509.04 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் 37,413.13 புள்ளிகளுடனும், நிஃப்டி 150.60 புள்ளிகள் இறக்கம் கண்டு 11,287.50 புள்ளிகளுடனும் நிறைவடைந்தன.

Advertisement

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 72.738 என்கிற புதிய சரிவை எட்டிப் பிடித்தது. இந்த இறக்கத்தின் காரணமாக சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கின்றனர். அதோடு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மத்தியிலான மார்க்கெட் சென்டிமென்டும் நெகட்டிவ்வாகவே இருந்தது மேலும் சந்தையின் இறக்கத்தை உறுதிப்படுத்தியது.

வங்கி, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி,மெட்டல், பார்மா மற்றும் ஐடி போன்ற பல்வேறு துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் விற்ற வண்ணமே இருந்ததால், மொத்த சந்தையும் இறக்கம் கண்டன.

Advertisement

பி.எஸ்.இ-ல் 95 பங்குகள் தன்னுடைய 52 வார அதிக விலையிலும், 153 பங்குகள் தன்னுடைய 52 வார குறைந்தபட்ச விலையிலும் வர்த்தகமாகி முடிந்திருக்கிறன. பி.எஸ்.இ-ல் இன்று வர்த்தகமான 2,867 பங்குகளில், 875 பங்குகள் ஏற்றத்திலும், 1,840 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தக நேரம் முடிவடைந்திருக்கின்றன.

English Summary

Closing Bell: Sensex Slumps 509 Points, Nifty Settles At 11,287
Advertisement