லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் 4 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்!

2018-ம் ஆண் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் உங்கள் பணத்தினை எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய உள்ளன என்று தெரிய வேண்டுமா? ஃபண்டு நிறுவனங்கள் சந்தை இருக்கும் நிலையில் அதிகளவில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தான் விரும்பி வருகின்ற என்பது கூர்ந்து கவனிக்கும் போது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த முறையில் லாபம் அளித்த ஃபண்டுகளைத் தேர்வு செய்து பார்த்து அதில் எந்த நிறுவனங்களில் எல்லாம் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்ற பட்டியலை இங்குத் தொகுத்து வழங்கி உள்ளோம். அதில் இன்வெஸ்கோ இந்தியா குரோத் 18.9 சதவீதமும், பிஓஐ ஆக்சா ஈக்விட்டி ஃபண்டு 18.9 சதவீதமும், பிஓஐ ஆக்சா ஈக்விட்டி ரெகுலர் 17.13 சதவீதமும், எடல்வீஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்யூனிட்டிஸ் ஃபண்டு 16.46 சதவீதமும் லாபம் அளித்துள்ளது.

பங்குகள்

மேலும் இந்த ஃபண்டுகளில் ஆராய்ந்த போது எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இடஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி, கிரேப்பைட் இந்தியா, எல்&டி, இண்டஸ்இண்டு வங்கி, ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ், எச்டிஎப்சி, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், டிசிஎஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் எஸ்கார்ட்ஸ் போன்ற பங்குகளில் தான் முதலீடு செய்துள்ளன.

இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஃபண்டு

எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ் இண்டு வங்கி, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி போன்றவற்றில் இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஃபண்டு நிறுவனமானது அதிகபட்சமாக முதலீடு செய்து ஆண்டுக்கு 18.91 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.

பிஓஐ ஆக்சா ஈக்விட்டி ஃபண்ட் - எக்கோ திட்டம்

கிராப்பைட் இந்தியா, எல்&டி, இண்டஸ்இண்டு வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்து ஆண்டுக்கு 18.09 சதவீத லாபத்தினை அளித்துள்ளது.

ஆக்சிஸ் ஈக்விட்டி ஃபண்டு - ரெகுலர் திட்டம்

கோடாக் மகேந்திரா வங்கி, எச்டிஎப்சி, பஜாஜ் ஃபினான்ஸ், அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்ம் ஐசிஐசிஐ வங்கி போன்ற பங்குகளில் முதலீடு செய்து 17.5 சதவீத லாபத்தினை அளித்து வருகிறது.

எடல்வீஸ் லார்ஜ் & மிட்கேப் ஃபண்டு

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஆக்‌ஷன் கன்ஸ்ட்ரக்‌ஷன், எஸ்கார்ட்ஸ், பிராட்டானியா இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து சராசரியாக 16.46 சதவீத லாபத்தினை அளித்து வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Here are 20 stocks in which 4 top Mutual Funds are betting on