இந்தியாவின் டாப் 10 சந்தை மூலதனம் படைத்த நிறுவனங்கள் எவை? ஆனால் 1 வாரத்தில் இழந்தது எவ்வளவு?

இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் இந்துஸ்தான் யூனிலீவர் உடபட 7 நிறுவனங்கள் சென்ற வாரம் 75,684.33கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்துள்ளனர்.

சென்ற வாரத்தில் சென்செக்ஸ் 255.25 புள்ளிகள் என 0.66 சதவீதம் வரை இழந்துள்ளது. இந்த 7 நிறுவனங்கள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுசூகி இந்தியா மற்றும் ஐடிசி உள்ளிட்டவையும் சந்தை மதிப்பை இழந்துள்ளன.

டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் உள்ளிட்டவை மட்டும் லாபத்தினை பெற்றுள்ளன. இதற்கு ரூபாய் மதிப்பு சரிவு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்துஸ்தான் யூனிலீவர்

சென்ற வாரம் முழுவதும் எப்எம்சிஜி துறை பங்குகள் அதிகளவில் சரிந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 29,499.99 கோடிகள் சரிந்து 3,54,774.44 கோடி ரூபாயாக உளது.

எஸ்பிஐ

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மூலதனம் 15,171.8 கோடி ரூபாய் சரிந்து 2,60,464.09 கோடி ரூபாயாக உள்ளது.

 

 

மாருதி சுசூகி

மாருதி சுசூகி இந்தியாவின் சந்தை மூலதனம் சென்ற வாரம் 11,016.86 கோடி ரூபாய் சரிந்து 2,63,792.92 கோடி ரூபாயாக உள்ளது.

ஐடிசி

ஐடிசி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 10,702.43 கோடி ரூபாய் சரிந்து 3,79,660.86 கோடி ரூபாயாக உள்ளது.

கோடாக் மஹிந்தரா வங்கி

கோடாக் மஹிந்தரா வங்கியின் சந்தை மூலதனம் 7,130.61 கோடி ரூபாய் சரிந்து 2,37,931.73 கோடி ரூபாயாக உள்ளது.

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் சென்ற வாரம் 1,194.57 கோடி ரூபாய் சரிந்து 5,58,693.63 கோடி ரூபாயாக உள்ளது.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி வங்கியின் தாய் நிறுவனமான எச்டிஎப்சி சந்தை மூலதனம் 1,018.07 கோடி ரூபாய் சரிந்து 3,25,634.13 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதனம் 2,754.32 கோடி ரூபாய் அதிகரித்து 8,09,254.98 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் முதல் 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த நிறுவனம் ரிலையன்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ்

இந்திய நிறுவனங்களில் 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த இரண்டாம் நிறுவனம் டிசிஎஸ் ஆகும். டிசிஎஸ் நிறுவனம் சென்ற வாரம் 574.29 கோடி ரூபாய் கூடுதல் சந்தை மூலதனம் பெற்று 7,96,228.75 கோடியாக உள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5,734.99 கோடி ரூபாய் உயர்ந்து பெற்று 3,20,258.56 கோடி ரூபாயாக உள்ளது.

இந்தியாவில் டாப் 10 சந்தை மூலதனம் படைத்த நிறுவனங்கள்

1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
2. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்)
3. எச்டிஎப்சி வங்கி
4. ஐடிசி
5. இந்துஸ்தான் யூனிலீவர்
6. எச்டிஎப்சி
7. இன்போசிஸ்
8. மாருதி
9. எஸ்பிஐ
10. கோடாக் மஹிந்தரா வங்கி

Have a great day!
Read more...

English Summary

In Top 10 Market Capital Companies 7 Lost Rs 75,684 Crore