உலகளாவிய பங்குச்சந்தையில் இந்த ஆண்டு அதிகளவில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த தென் கொரிய பங்குச்சந்தை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஏஐ பங்குகள் தான்.

Advertisement

ஏஐ மீதான முதலீடுகள் பெரிய அளவில் லாபம் அளிக்கவில்லை என்றும், இதன் மூலம் நிறுவனங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஆகிறது என்ற கருத்து தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனால் உலகளில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான செலவு செய்யும் அளவுகளை நிறுவனங்கள் குறைக்க துவங்கியுள்ளது, இதில் டெஸ்லா போன்ற பெரும் நிறுவனங்களும் அடக்கம்.

Advertisement

இதன் செயின் ரியாக்ஷனாக ஏஐ சார்ந்த நிறுவன பங்குகள் மூலம் பெரிய அளவிலான உயர்வை பதிவு செய்து வந்த தென் கொரிய பங்குச்சந்தை இன்றும் 8 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய முதலீட்டாளர்களும் பலர் தைவான், தென் கொரிய பங்குச்சந்தையில் கடந்த சில வருடங்களாக முதலீடு செய்து வருகின்றனர், இதனால் இன்றைய 8 சதவீத சரிவு இந்திய முதலீட்டாளர்களையும் பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் தென் கொரியாவின் காஸ்பி குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 8.03 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இந்த சரிவை தொடர்ந்து தென் கொரிய பங்குச்சந்தை 20 நிமிடம் தற்காலிகமாக பங்குச்சந்தையை ஷட்டவுன் செய்தது. பொதுவாக பங்குச்சந்தை பெரிய அளவில் சரியும் போது ஆபத்து அளவுகளை குறைக்கும் காரணமாக circuit breaker செய்யப்படும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் panic selling கட்டுப்படுத்தப்படும்.

Advertisement

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தென் கொரிய பங்குச்சந்தையில் பெரும் சந்தை மதிப்பீட்டை கொண்டு இருக்கும் சாம்சங் நிறுவனம் 9.75 சதவீதம் சரிந்துள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் சாம்சங் நிறுவனத்தின் 2வது காலாண்டு இயக்க லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 19 மடங்கு அதிகமாக இருக்கிறது என ரிப்போர்ட் வெளியான நிலையம் 9.75 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து தென் கொரியாவின் புதிய பவர்ஹவுஸ் ஆக மாறியிருக்கும் SK Hynix பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 10 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இவ்விரு நிறுவனங்கள் தான் காஸ்பி குறியீட்டில் சுமார் 50 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது, இதனால் இவ்விரு நிறுவனங்களின் சரிவு பெரும் பாதிப்பை தென் கொரிய பங்குச்சந்தைக்கு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதேவேளையில் SK Hynix நிறுவனம் சுமார் 28 பில்லியன் டாலர் நிதியை திரட்ட தனது பங்குகளை அமெரிக்க பங்குச்சந்தையில் விற்க தயாராகி வருகிறது, இந்த முயற்சி வெற்றிப்பெற்றாலும் சந்தையில் புழக்கம் அதிகரித்து விலை தற்காலிகமாக சரிய வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்க சந்தையிலும் தற்போது ஏஐ சார்ந்த முதலீடுகள் குறைந்து மந்த நிலைக்குள் முடங்கியிருக்கும் காரணத்தால் இதன் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இவ்விரு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 9 சதவீதமும், Hanwha Ocean 24 சதவீதமும், ஹூண்டாய் மோட்டார் 8 சதவீதமும், கியா கார்ப் 8 சதவீதமும், POSCO Holdings 4 சதவீதமும், பார்மா நிறுவனமான Samsung BioLogics 1.3 சதவீதமும் சரிந்துள்ளது. தென் கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் 910 பங்குகளில் 511 பங்குகள் சரிவை சந்தித்துள்ளது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1.3 டிரில்லியன் வான் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.