பங்கு சந்தை மந்தமாக துவங்கி உயர்வுடன் முடிவடைந்தது!

பங்கு சந்தை இன்றைய பிற்பகல் வரை மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் உணவு வேலைக்குப் பிறகு அட்டோமொபைல், டெலிகாம் மற்றும் மெட்டல் துறை பெற்ற எழுச்சியால் உயர்வுடன் முடிவடைந்தது,

ஜப்பானின்ற்கு எதிரான டிரம்ப்பின் வர்த்தக முடிவுகள் ஆசிய சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 147.01 புள்ளிகள் என 0.38 சதவீதம் சரிந்து 38,389.82 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 52.20 புள்ளிகள் என 0.45 சதவீதம் சரிந்து 11,59.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஆட்டோமொபைல், டெலிகாம், மெட்டல், அடிப்படை சாதனங்கள் உள்ளிட்ட துறைகள் லாபம் அளித்துள்ளன. அதே நேரம் வங்கி, நிதி மற்றும் பவர் துறை பங்குகள் நட்டம் அடைந்துள்ளன.

லாபம் அளித்த பங்குகள்

ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், மஹிந்தரா & மஹிந்தரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

யெஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், சன் பார்மா, பவர் கிரிட், எஸ்பிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி பங்குகள் லாபம் அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Market Close: Sensex, Nifty settle higher