38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..!

இந்திய பங்கு சந்தை குறியீடுகளில் முதன்மையான சென்செக்ஸ் வியாழக்கிழமை காலை சந்தை துவங்கிய உடன் 38,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.

சந்தை துவங்கிய உடன் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108 புள்ளிகள் என 0.28 சதவீதம் உயர்ந்து 38,002 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்தது.

தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 21.90 புள்ளிகள் என 0.20 சதவீதம் உயர்ந்து 11471.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிகல் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் மாருதி சுசூகி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, எண்டிபிசி, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Market Sets All Time High: Sensex Above 38,000, Nifty 11,495