பங்கு சந்தையில் புதிய உச்சம்.. சென்செக்ஸ் 3900 புள்ளிகளும், நிப்டி 11,750 புள்ளியும் தொட்டது!

சர்வதேச சந்தையில் உள்ள சாதகமான முடிவுகளால் இந்திய பங்கு சந்தையும் உயர்வை சந்தித்துள்ளது. காலை சந்தை துவங்கிய போது சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 3900 புள்ளிகளைக் கடந்தது, அதே நேரம் நிப்டி 11,750 புள்ளிகளையும் தொட்டு இருந்தது.

sensex

காலை 9:40 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 88.58 புள்ளிகள் என 0.23 சதவீதம் உயர்ந்து 38,787.90 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 29.35 புள்ளிகள் என 0.25 சதவீதம் உயர்ந்து 11,722.50 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

என்டிபிசி, கோல் இந்தியா,, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டு வருகிற அதே நேரம் விப்ரோ, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ பங்குகள் விற்கப்பட்டு வருகிறன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 76.21 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 68.87 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70.81 ரூபாயாக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Markets Scale Fresh Peaks: Sensex Touched 3900 pts & Nifty 11,750 pts