நிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு!

சர்வதேச சந்தையில் இன்று நிலவிய சாதகமான முடிவுகளால் சென்செக்ஸ், நிபி இரண்டும் லாபத்துடன் முடிவடைந்தன. ஜூன் மாதத்திற்குப் பிறகு துருக்கி மீதான பொருளாதாரத் தடை குறித்துப் பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்துள்ள அமெரிக்கா போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை உயர்வைச் சந்தித்துள்ளது..

சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 284.32 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 37,978.88 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 85.0 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 11,470.75 புள்ளியாகவும் வர்த்தகமானது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளைத் தவிற அடிப்படை பொருட்கள், எப்எம்சிஜி, மெட்டல், வங்கி மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் அனைத்தும் லாபம் அளித்துள்ளன.

லாபம் அளித்த பங்குஅள்

யெஸ் வங்கி, எஸ்பிஐ, வேதாந்தா, இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐடிசி பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, மாருதி, கோல் இந்தியா, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Nifty closes at record high, Sensex surges 284 points