அமெரிக்கா- ஈரான் போர் அச்சம் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை இன்று ஏற்படுத்தியுள்ளது, வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தையின் மோசமான துவக்கத்தின் எதிரொலியாக சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 180 புள்ளிகள் வரையிலும் சரிவை சந்தித்துள்ளது.

Advertisement

இன்றைய மோசமான வர்த்தகத்திற்கு மத்தியில் பார்மா பங்குகள் மட்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் பார்மா நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக நிஃப்டி பார்மா குறியீடு 1.65 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய வர்த்தகத்தில் டோரென்ட் பார்மா மற்றும் மன்கைண்ட் பார்மா ஆகியவை தலா 3 சதவீதம் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது, இதேபோல் சிப்லா, திவில் லேப்ஸ், லாரஸ் லேப், ஆல்கெம் லேப்ஸ், சாய் லைப் சைன்ஸ் பங்குகள் 2 சதவீதமும், சைடஸ் லைப்சைன்ஸ், அரபிந்தோ பார்மா, அஜந்தா பார்மா ஆகியவை 1 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இத்துறையில் மற்ற நிறுவனங்கள் அதாவது ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளை பார்க்கும் போது ஆர்பிஜி லைப் சைன்ஸ், தைரோகேர் டெக்னாலஜிஸ், ஹெஸ்டர் பயோசைன்ஸ், ஒன்சோர்ஸ் ஸ்பெஷாலிட்டி பார்மா, நுயூலேண்ட் பார்மா ஆகியவை 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Advertisement

தத்வா சின்தான் பார்மா கெமி நிறுவன பங்குகள் மட்டும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 20 சதவீதம் உயர்ந்து 52 வார உயர்வை தொட்டு ஒரு பங்கு விலை 1714.10 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக பதிவாகியுள்ளது.

பொதுவாக பார்மா நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவில் சிறப்பான லாபத்தை பதிவு செய்யும் போது பங்கு விலை உயரும். இதேபோல் தான் இப்போதும் நடந்துள்ளது, ஆனால் தற்போது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து மொத்த முதலீட்டு சந்தையும் பெரும் நெருக்கடிக்குள் மாடிக்கொண்டு இருக்கும் வேளையில் பார்மா பங்குகள் உயர்ந்துள்ளது.

Advertisement

பார்மா நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த மருந்துகளின் வெற்றி தான் தற்போது காலாண்டு முடிவில் லாபமாக எதிரொலித்துள்ளது என எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் மூத்த அதிகாரி சன்னி அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் காலாண்டில் அதிக லாபத்தையும், வருவாயை பெறும். ஆனால் அமெரிக்க வர்த்தகம் தொடர்ந்து கலவையாகவே இருக்கும் என தெரிவித்தார்.