பங்குச்சந்தையில் இறங்க வரிசைக்கட்டி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..!

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தம் 38 (IPO) புதுப் பங்கு விற்பனைகளின் மூலம் 2018-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்ப்புகளுடன் பங்குச்சந்தையானது வெற்றிப்பாதையில் பயணித்தது.

அரசின் நிதித் திரட்டல் இலக்கை எட்ட பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றின் பின் ஒன்றாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. ஹட்கோ, கொச்சின் ஷிப்யார்ட், நியூ இந்தியா அஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப், ஹெச் ஏ எல் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய ஆறு நிறுவனங்களையும் பங்குச்சந்தையில் பட்டியலிட்டதில் அந்நிறுவனங்களின் நிகரத் தொகையானது 24,000 கோடி ரூபாய்களாக உயர்ந்துள்ளது.

ஏறக்குறைய 80,000 கோடி ரூபாய் 2018-19 ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட முதலீடாகப் பொதுத்துறை நிறுவனங்களின் புதுப் பங்குகள் வெளியீடு வாயிலாகப் பெரும் முனைப்பில் உள்ளது அரசு. இந்த வருடம் புதிதாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடும்/பங்குகளை விற்கும் வாய்ப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் முழுப் பட்டியலை கீழே காணலாம்.

1. ரைட்ஸ் (RITES):

சுமார் 600 கோடி ரூபாய் நிதியைத் திரட்டும் முனைப்புடன் தனது 12 விழுக்காடு பங்கு விற்பனைத் திட்டத்துடன் இந்த ஆண்டு மே மாதம் பங்குச்சந்தையில் களமிறங்குகிறது ரைட்ஸ் (RITES) என்னும் ரயில்வே பொதுத்துறை நிறுவனம்.

2. ஐஆர்எப்சி (IRFC) அல்லது ரயில்வேஸ் பைனான்ஸ் கார்பொரேஷன்:

இந்த நிறுவனமும் மே மாதமே பங்குச்சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களின் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் படி, மொத்தம் ரூ. 63.92 பில்லியன் ரூபாய்கள் வரி விலக்கின் வாயிலாக இந்தப் பங்கின் பட்டியலிடலானது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இப்பங்கு விற்பனையின் மதிப்பீடானது, இந்நிறுவனத்தின் நிகர மதிப்பைச் சிறப்பாக உயர்த்தும் வகையில் இருக்கும். இந்நிறுவனம் தனது 10 விழுக்காடு பங்குகளை விற்கும் திட்டத்துடன் களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

3. ஐ.ஆர்.இ.டி.ஏ அல்லது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்(IREDA):

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி அரசுக்குச் சொந்தமான ஐ.ஆர்.இ.டி.ஏ நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பங்குச்சந்தையில் கால்பதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ வெளியீடுகள் மூலம் சுமார் 13.90 கோடிப் பங்குகளை விற்கத்திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். பிப்ரவரி 16 ஆம் தேதி செபி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது . இந்நிறுவனம் ஐபிஓ(IPO) வெளியீட்டுக்குப்பின் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் தனது எப் பி ஓ வை(FPO) வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

4.ஐ.ஆர்.கோன்:

ரெயில் உள்கட்டமைப்புப் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான இர்கோன் இன்டர்நேஷனல் லிமிடெட் , பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அரசு நிறுவனமான செபியில் அதன் பங்கு வெளியீடு வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது .இந்தப் பங்கு வெளியீட்டை அரசாங்கம், ரயில்வே அமைச்சகத்தின் மூலம் ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். மொத்தம் 9.90 மில்லியன் Ircon பங்குகள் அல்லது 10.53 % பங்குகளை விற்க முன்வந்துள்ளது அரசு. இதன் IPO அளவு 1,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது.

5. ஆர்.வி.என்.எல் அல்லது ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்:

மற்றொரு இரயில்வேயின் (பி.எஸ்.யூ) பொதுத்துறை நிறுவனம்(RVNL) சந்தையில் தனது 25% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.இதன் பங்கு வெளியீடுகள் அடுத்த ஆண்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் லிமிடெட்:

அரசு நடத்தும் இந்தப் போர்க்கப்பல் உற்பத்தி நிறுவனம் தனது ஐ பி ஓ(IPO) வெளியீடுகள் மூலம் சுமார் 1,000-1,200 கோடி ரூபாய் நிதியைத்திரட்டத் திட்டமிட்டுள்ளது

7. மசகோன் டாக் லிமிடெட் (Mazagon Dock Ltd):

அரசின் இன்னொரு கப்பல் கட்டுதல் நிறுவனமான இது , இந்த ஆண்டில் பங்குச்சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது.ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைத் தவிர்த்து இதன் 22.41 மில்லியன் பங்குகளை அரசாங்கம் விற்கிறது.பங்கு விற்பனையின் மூலம் 1500 கோடி ரூபாய்களைத்திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

8. மூன்று பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் இணைக்கப்பட்ட நிறுவனம்:

நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட மூன்று பொதுக் காப்பீட்டுப் பொதுத்துறை நிறுவனங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்பை 2018 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்டது. இணைக்கப்பட்ட நிறுவனமானது பின்னர்ப் பங்குச்சந்தையில் பட்டியலிட பரிந்துரைக்கப்படும்.

Have a great day!
Read more...

English Summary

PSU Companies To Go Public In FY19