இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..!

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ரூபாயாகச் சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பின் சரிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடும் காரணம் என்றும் ஆனால் இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று அந்நிய செலாவணி டீலர்கள் கூறுகின்றனர்.

சென்ற வார நிலவரம்

வெள்ளிக்கிழமை டலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 68.84 ரூபாய் என இருந்த நிலையில் திங்கட்கிழமை 69.53 ரூபாய் எனச் சரிந்து 69.62 ரூபாயானது. 10 வருடம் பத்திர திட்டங்களின் வருவாய் 7.75 சதவீதத்தில் இருந்து 7.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதலீட்டாளர்கள்

துரிக்கி நாணய சரிவினை அடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான நாணயமான அமெரிக்க டாலர் மற்றும் யென் மீது தங்களது கவனத்தினைத் திருப்பி உள்ளனர்.

பங்கு சந்தை நிலவரம்

காலை சந்தை துவங்கியது முதல் சந்தை சரிந்து காணப்படும் நிலையில் 10:53 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான நிப்டி 185.48 புள்ளிகள் என 0.49 சதவீதம் சரிந்து 37,683.83 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 54.55 புள்ளிகள் என 0.48 சதவீதம் உயர்ந்து 11,374.95 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

லாபம் & நட்டம் அளிக்கும் பங்குகள்

கோல் இந்தியா, சன் பார்மா, பார்தி ஏர்டெல், எல் &டி, மஹிந்தரா & மஹிந்தரா பங்குகள் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் வேதாந்தா, எஸ்பிஐ, எச்டிஎப்சி, யெஸ் வங்கி, ஓஎன்ஜிசி பங்குகள் நட்டத்தினை ஏற்படுத்தி வருகின்றன.

கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையினைப் பொருத்த வரையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 72.81 டாலர் ஒரு பேரல் எனவும், WTI கச்சா எண்ணெய் 67.63 டாலர் ஒரு பேரல் எனவும் விலை உயர்ந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Rupee At All Time Low Of 69.62 Against Dollar; Sensex Slides