டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 26 பைசா சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு முதன் முறையாக 71 ரூபாய் என்று மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. காலை சந்தை துவங்கிய உடன் 71 ரூபாயினை விடக் கூடுதலாகச் சரிந்த ரூபாய் மதிப்பு மீண்டும் 70.92 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 70.74 ஆகச் சரிந்த நிலையில் இன்று காலை சந்தை துவங்கிய உடன் மீண்டும் சரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.

மாத இறுதி தேவை, அமெரிக்க டாலரின் வலுவான நிலை இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவை போன்ற காரணங்களால் தான் ரூபாய் மதிப்பின் இந்தச் சரிவுக்குக் காரணம் ஆகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பானது இந்த ஓரு ஆண்டில் மட்டும் 11 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Rupee Collapses To New Record Low Of 71 Per Dollar