டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 பைசா உயர்வு!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து 72 ரூபாயினை தொட இருந்த நிலையில் இன்றி 9 பைசா சரிந்து 71.66 ரூபாயாக உள்ளது.

Advertisement

ஏற்றுமதியாளர்கள் தங்கள் கைகளில் உள்ள அமெரிக்க டாலரை விற்றது மற்றும் வங்கிகள் அதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரூபாய் மதிப்பினை சரிவில் இருந்து மீட்க முயன்றது, ஆர்பிஐ 9 வருடங்களுக்குப் பிறகு தங்கத்தினை வாங்கியது பொன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் இருன்0து மீண்டுள்ளது.

Advertisement

ரூபாய் மதிப்பு உயர்ந்த அதே நேரம் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.16 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 72.27 டாலர் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 4 நாட்களாகச் சரிந்து வந்த இந்திய பங்கு சந்தையில் இன்று மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 134.61 புள்ளிகள் என 0.38 சதவீதம் உயர்ந்து 38,161.65 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 356.60 புள்ளிகள் என 0.31 சதவீதம் உயர்ந்து 11,512.55 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

English Summary

Rupee Gains 9 paise Today Against Dollar and Stood At Rs 71.66
Advertisement