டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70.80 ஆக வரலாறு காணத சரிவு!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு புதன் கிழமை சந்தை முடியும் போது 70.80 ஆக இருந்து வந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் சரிந்து 70.80 ஆக உள்ளது.

Advertisement

துருக்கி மீதான பொருளாதாரத் தடை, சீனா மீதான வர்த்தகப் போர், ஈரான் மீதான பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவான நிலையில் உள்ளது. இது குறைந்த காலத்திற்குத் தான் என்றாலும் இந்தியா பொன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும்.

Advertisement

கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய டாலர் தேவைப்படுகிறது. நிலை இப்படியே நீட்டித்தால் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு பெறும் அளவில் சரியும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதே நேரம் ஏற்றுமதியாளர்களுக்கு இதன் மூலம் பல வகையில் நன்மை அதிகரிக்கும்.

ஆகஸ்ட் மாத எப்&ஓ காரணமாக இந்திய பங்கு சந்தைக் குறியீடுகள் இன்று பிளாட்டாகவே வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

English Summary

Rupee Plunges To Record Low Of 70.80 Apiece A Dollar
Advertisement