டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.18 ஆகச் சரிவு.. பங்கு சந்தையும் சரிவுடனே துவங்கியுள்ளது..!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புத் திங்கட்கிழமை வரலாறு காணாத விதமாக 72.18 எனச் சரிந்துள்ளது. முந்தைய சந்தை நாள் முடிவில் ரூபாய் மதிப்பு 71.73 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 45 பைசா சரிந்துள்ளது.

அமெரிக்கா பண்ணை இல்லா ஊதியங்கள் குறித்த தரவினை வெளியிட்டதை அடுத்து இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை சற்று நேரம் உயர்ந்து இருந்தது. ஆனால் சில மணி நேரங்களில் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு விகிதம் எதிர்பார்த்ததினை விட அதிகமாக இருப்பதாகத் தரவுகள் வெளியான உடன் ரூபாய் மதிப்பு அன்று மீண்டும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாணயங்களிலேயே இந்திய ரூபாய் மதிப்பு மிகப் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கும் நிலையில் ஆர்பிஐ அதில் தலையிட்டு குறைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 9 வருடங்களுக்குப் பிறகு தங்கத்தினைக் கொள்முதல் செய்வதாகவும் அறிவித்து இருந்தது.

10 வருட அரசு பத்திர திட்டங்கள் மீதான லாபமும் 80.29 சதவீதத்தில் இருந்து 8.105 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரம் காலை 11:25 மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 295.56 புள்ளிகள் என 0.77 சதவீதம் சரிந்து 38,094.26 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 93.90 புள்ளிகள் என 0.83 சதவீதம் சரிந்து 11,492.75 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Rupee Slides To Fresh New Low vs Dollar ; Sensex, Nifty Also Opens Lower