ஜிடிபி தரவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சென்செக்ஸ் சரிவு!

2018-2019 நிதி ஆண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் இன்று மாலை வெலியாக இருந்த நிலையில் சென்செக்ஸ் சரிந்தும், நிப்டி பிளாட்டாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 45.03 புள்ளிகள் என 0.12 சதவீதம் சரிந்து 38,645.07 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 3.70 புள்ளிகள் என 0.03 சதவீதம் உயர்ந்து 11,680.50 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மெட்டல், பார்மா, எப்எம்சிஜி துறை பங்க்குகள் லாபம் அளித்த நிலையில் வங்கி துறை பங்குகள் நட்டம் அடைந்துள்ளன.

லாபம் அளித்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ மொபைல், இன்போசிஸ் மற்றும் இண்டஸ் இண்டு பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அடைந்த பங்குகள்

யெஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்தரா & மஹிந்தரா, மாருதி, வேதாந்தா, டாடா ஸ்டீல் பங்குகள் நட்டம் அடைந்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex Closes 45 Points Lower Ahead Of GDP Data