சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் முடிந்தும் நிப்டியால் முடியவில்லை..!

காலைச் சந்தை துவங்கிய போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டு புதிய உச்சத்தினைத் தொட்டு இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட சரிவில் நிப்டி சாதனை புள்ளிகளை விட்டு விலகியது. ஆனால் அதனைச் சென்செக்ஸ் மீண்டும் எட்டியது.

சர்வதேச சந்தையில் ஐரோப்பிய சந்தை லாபம் அசைய ஆசிய சந்தை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் இன்றைய சந்தை மதிப்பு என்ன ஆனது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 51.01 புள்ளிகள் என 0.31 சதவீதம் சரிந்து 38,336.76 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான 4.30 புள்ளிகள் சரிந்து 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையில் ஐடி, எப்எம்சிஜி மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன. மெட்டல், அடிப்படை பொருட்கள், வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் சரிந்துள்ளன.

லாபம் அளித்த பங்குகள்

எல்&டி, எண்டிபிசி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் லாபம் அளித்தன.

நட்டம் அளித்த பங்குகள்

கோடாக் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோமொபைல், டாடா ஸ்டீல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex closes at record high, But Nifty Fails