சென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது!

ரூபாய் மதிப்பு சரிவுக்குப் பிறகு ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் இந்திய பங்கு சந்தையில் லாபம் அளித்து இருந்தாலும் வியாழக்கிழமை மெட்டல் மற்றும் வங்கி துறை பங்குகளால் நட்டத்தினை அளித்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70.40 ஆகச் சரிந்தது, துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, ஆர்பிஐ வங்கியின் கொள்கை கூட்டம் போன்றவை இன்றைய பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 188.44 புள்ளிகள் என 0.50 சதவீதம் சரிந்து 37,663.56 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 50.05 புள்ளிகள் என 0.44 சதவீதம் சரிந்து 11,385.05 புள்ளியாக வர்த்தகச் செய்யப்பட்டது.

துறை வாரியான் அனிலவரம்

மும்பை பங்கு சந்தையில் மெட்டல், அடிப்படை பொருட்கள், நிதி, எனர்ஜி துறை பங்குகள் நட்டம் அளித்த நிலையில் ஹெல்த்கேர், ஐடி, யூட்டிலிட்டிஸ் மற்றும் டேக் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

சன் பார்மா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் எண்டிபிசி பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.

நட்டம் அளித்த நிறுவனங்கள்

விப்ரோ, எல்&டி, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி வங்கி, வேதாந்தா, கோடாக் வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex dives 188 points, Nifty settles at 11,385