சென்செக்ஸ் 202 புள்ளிகளும், நிப்டி முதன் முறையாக 11,738 புள்ளியாகவும் உயர்வு!

இந்திய பங்கு சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது. சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 202.52 புள்ளிகள் என 0.52 சதவீதம் உயர்ந்து 38,896.63 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 46.55 புள்ளிகள் என 0.40 சதவீதம் உயர்ந்து 11,738.50 புள்ளியாகவும் உயர்வு.

Advertisement

இன்றைய பங்கு சந்தையில் மெட்டல், ஆட்டோமொபைல், பவர், ஐடி மற்றும் டெக் பங்குகள் லாபம் அளித்துள்ளன. அதே நேரம் பொதுத் துறை நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் & எரிவாய் மற்றும் ரியாலிட்டி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

Advertisement

லாபம் அளித்த பங்குகள்

வேதாந்தா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

ஐடிசி, இண்டஸ் இண்டு, ஓஎன்ஜிசி, இந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, யெஸ் வங்கி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

English Summary

Sensex ends at new high of 38,897; Nifty closes at 11,738
Advertisement