ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தும் இரண்டாம் நாளாகத் தொடர்ந்து இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிவுடனே உள்ளன. ஜூன் மாதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்ட உடன் பங்கு சந்தை குறியீடுகள் அதிகளவில் முதலீட்டை ஈர்த்து இருந்தன.
ஆசிய சந்தையில் இந்திய சந்தை இன்று மிகப் பெரிய சரிவினை பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மீண்டும் அமெரிக்கா சீனாவின் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீத வரியை உயர்த்தி இருப்பதே ஆகும்.
எனவே இன்றைய இந்திய பங்கு சந்தையின் நிலவரம் என்ன என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 356.46 புள்ளிகள் என 0.95 சதவீதம் சரிந்து 37,165.16 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.50 புள்ளிகள் என 0.89 சதவீதம் சரிந்து 11,244.70 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்த வரையில் ரியாலிட்டி, ஆட்டோமொபைல், வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
பவர் கிரிட், கோல் இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ் இண்ட் வங்கி, விப்ரோ மற்றும் சன் பார்மா பங்குகள் லாபம் அளித்துள்ளன.
பார்தி ஏர்டெல், கோடாக் வங்கி, மாருதி, ரிலையன்ஸ், எச்டிஎப்சி, வேதாந்தா பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.