புதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் உயர்வால் இந்திய பங்கு சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு, காப்ரேட் நிறுவனங்களின் முடிவுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவை இன்றைய இந்திய பங்கு சந்தையில் என்னவெல்லாம் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என்று இங்குப் பார்க்கலாம்.

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 157.55 புள்ளிகள் என 0.42 சதவீதம் உயர்ந்தும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 41.20 புள்ளிகள் என 0.37 சதவீதம் உயர்ந்து 11,319.55 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் டெலிகாம், எனர்ஜி, ஆட்டோ, பவர் துறைகள் லாபத்தினை அளித்த நிலையில் ஐடி, டேக், கேப்பிடல் கூட்ஸ் மற்றும் தொழிற்சாலைகள் துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, மஹிந்தரா & மஹிந்தரா, வேதாந்தா பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.

நட்டம் அளித்த நிறுவனங்கள்

இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி, எல்&டி, அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, கோடாக் வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex Gained 158 Points, Nifty Touched At 11,320