சென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிப்டி 11,537 புள்ளியாகவும் உயர்ந்தது!

இந்திய பங்கு சந்தை தொடர்ந்து 6 நாட்கள் சரிந்து வந்ததில் இருந்து மீண்டு வியாழக்கிழமை லாபத்துடன் முடிந்துள்ளது. அதே நேரம் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சரிந்து 72.07 ரூபாய் ஒரு டாலர் என்ற மோசமான நிலையில் உள்ளது. சீனா மீது அமெரிக்கா மீண்டும் பல பொருட்கள் மீது வரியினை உயர்த்தி வர்த்தகப் போரினை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடன சென்செக்ஸ் 224.50 புள்ளிகள் என 0.59 சதவீதம் சரிந்து 38,242.81 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 59.95 புள்ளிகள் என 0.52 சதவீதம் உயர்ந்து 11,536.90 புள்ளியாகவும் வர்த்தம் செய்யப்பட்டு இருந்தது.

லாபம் ஈட்டிய பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், கோல் இந்தியா, சன் பார்மா, அதானி போர்ட்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபம் அளித்தன.

நட்டம் அளித்த பங்குகள்

யெஸ் வங்கி, மாருதி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்தன.

Have a great day!
Read more...

English Summary

Sensex Lost 224 Points and Nifty Stalls 11,537 pts