புதிய உச்சத்துடன் சந்தையினை முடித்துக்கொண்ட சென்செக்ஸ், நிப்டி..!

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 249.09 புள்ளிகள் வரை உயர்ந்து 37,805.25 எனவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 66.85 புள்ளிகள் வரை உயர்ந்து 11,427.65 புள்ளிகள் எனப் புதிய உச்சத்தினைத் தொட்டு இருந்தன. இதுவே சந்தை நேர முடிவில் சரிந்தும் இருந்தது. எனவே இன்றைய பங்கு சந்தை முடிவுகளை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 135.73 புள்ளிகள் என 0.36 சதவீதம் உயர்ந்து 37,691.89 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 26.30 புள்ளிகள் என 11,387.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையில் வங்கி, டெலிகாம், ஃபினான்ஸ், மெட்டல் துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் ரியாலிட்டி, எப்எம்சிஜி, ஹெல்த்கேர், யூட்டிலிட்டிஸ் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

ஆக்சிஸ் வங்கி,, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப், கோல் இந்தியா பங்குகள் லாபம் அளித்தன.

நட்டம் அளித்த பங்குகள்

கோடாக் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex, Nifty close at record highs (6.8.2018)