புதிய உச்சங்களை தொட்ட சென்செக்ஸ், நிப்டி பிளாட்டாகச் சந்தையை முடித்துக்கொண்டன..!

அமெரிக்க - சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தின் இடையில் வால் ஸ்ட்றிட் கார்ப்ரேட் நிறுவனங்கள் லாபத்தினைப் பதிவு செய்து வரும் நிலையில் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் பெறும் பயன் அடைந்து இருந்தாலும் இந்திய பங்கு சந்தை பிளாட்டாகவே முடிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்புச் சரிவு, இறக்குமதி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்கள் சந்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினைக் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.09 புள்ளிகள் என 0.07 சதவீதம் சரிந்து 37,665.80 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 2.35 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 11,389.45 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நிலவரம்

நுகர்வோர் சாதனங்கள், மெட்டல், அடிப்படை பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் அளித்துள்ள நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் தொழில்துறை பங்குகள் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், எண்டிபிசி, வேதாந்தா, மாருதி, யெஸ் வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex, Nifty close flat after hitting record highs