இரண்டு நாட்களாக புதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை இன்று சரிவும் முடிவடைந்தது!

இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சங்களைத் தொட்ட சாதனைகள் படைத்த நிலையில் புதன்கிழமை நட்டம் அடைந்தது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத அளவில் 70.57 ரூபாயாகச் சரிந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பிரெண்ட் மற்றும் WTI என இரண்டிலும் சரிந்துள்ளது. இந்நிலையில் இன்று பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கு விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 173.70 புள்ளிகள் என 0.45 சதவீதம் சரிந்து 38,722.93 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 46.60 புள்ளிகள் என 0.40 சதவீதம் சரிந்து 11,691.90 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

துறை வாரியன நிலவரம்

மெட்டல், ரியாலிட்டி, பொதுத் துறை நிறுவனங்கள், எண்ணெய் & எரிவாயு, கட்டுமானம், ஆட்டோ மொபைல் உ ள்ளிட்ட துறைகள் லாபம் அளித்த நிலையில் பவர், கேப்பிட்டல் கூட்ஸ், பங்கி, எப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், ஐடி, ஹெல்த்கேர் டேக் உள்ளிட்ட துறைகள் நட்டம் அடைந்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

ஓஎன்ஜிசி, எஸ்பிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், யெஸ் வங்கி, இண்டஸ் இண்ட், என்டிபிசி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Sensex, Nifty Fall After Two Day's Fresh Record High