சென்செக்ஸ் முதன் முறையாக 38,500 புள்ளிகளைக் கடந்து சாதனை..!

அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினைத் தொட்ட நிலையில் ஆசிய சந்தைகளும் வாரத்தின் முதல் சந்தை நாளில் உயர்வைச் சந்தித்துள்ளன. இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் நிப்டி இரண்டுமே புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன.

Advertisement

இந்திய பங்கு சந்தையின் இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணமான துறைகள் என்றால் அவை எப்எம்சிஜி மற்றும் மெட்டல் துறை பங்குகளே ஆகும்.

Advertisement

சந்தை துவங்கிய பிறகு காலை 10:33 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 356 புள்ளிகள் என 0.93 சதவீதம் உயர்ந்து 38,603.94 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.75 புள்ளிகள் என 0.88 சதவீதம் உயர்ந்து 11,659.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பவர் கிரிட், யெஸ் வங்கி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்க்கள் லாபம் அளித்து வரும் அதே நேரம் சன் பார்மா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.

English Summary

Sensex and Nifty hit fresh record highs today
Advertisement