மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ், நிப்டி..!

முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவித்து வருவதால் இந்திய பங்கு சந்தை குறியீடுகள் தொடர்ந்து புதிய தொட்டத்தினைத் தொட்டு வருகின்றன. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி முதன் முறையாக 11,200 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

காலை சந்தை துவங்கிய உடன் 9:3 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 254.64 புள்ளிகள் என 0.70% உயர்ந்து 37,242.03 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 68.80 புள்ளிகள் என 0.62% உயர்ந்து 11,236.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மூன்றாவது நாளாக இன்று அமெரிக்க டாலாருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச பங்கு சந்தை குறியீடுகளில் டாவ் ஜோன்ஸ் 112.97 புள்ளிகள் உயர்ந்து பிளாட்டாகவும், எஸ்&பி 8.63 புள்ளிகள் சரிந்தும், நாஸ்டாக் 80.05 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ஐடிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் லாபத்தினை அளித்து வருகின்றன. இண்டல்கோ பங்குகளும் உயர்ந்துள்ளன.

யெஸ் வங்கி, ஓஎன்ஜிசி, மஹிந்தரா & மஹிந்தரா, மாருதி, அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் பங்குகள் நட்டத்தினை அளித்து வருகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Sensex, Nifty Open At Another Record High